பாலைவன எலி (gerbil) என்பது கொறிணி வகையைச் சேர்ந்த சிறு பாலூட்டியாகும். இவற்றில் கிட்டத்தட்ட 110 இனங்கள் உள்ளன. இவற்றில் பல பகலாடியாகவும் அனைத்துண்ணியாகவும் உள்ளன.
பகல் முழுவதும் வளைக்குள் ஓய்வெடுத்து, இரவில் சூரிய வெப்பம் தணிந்த பிறகு பாலைவனத்தில் இரை தேட ஆரம்பிக்கும். இதன் உடலில் வியர்வை உண்டாவதில்லை. மிகச் சிறிய அளவில் சிறுநீர் வெளியேற்றும்.