கம்போடியா, சீனா, இந்தியா, ஜப்பான், இலாவோசு, நேபாளம், பூட்டான், இலங்கை, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படும் சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்த பாலூட்டி இனம் கார்சுபீல்டின் மூஞ்சூறு (Horsfield’s shrew)(குரோசிடுரா ஹார்சுபீல்டி) ஆகும்.
விளக்கம்
இதன் தலை மற்றும் உடல் நீளம் சுமார் 6 முதல் 7 செ.மீ வரையும், வால் நீளம் 5 முதல் 6 செ.மீ. வரை இருக்கும். இதன் நிறம் மேலே மங்கலான பழுப்பு நிறமும், கீழே மங்கலான சாம்பல் நிறமும் கொண்டது. இது பிக்மி மூஞ்சூறுவிலிருந்து பெரிய கருப்பு நிற பாதத்தின் காரணமாக வேறுபடுகிறது.