இந்திய நீள்காது முள்ளெலி (Indian Long-eared Hedgehog, விலங்கியல் இருசொற்பெயர்: Hemiechinus collaris) என்றழைக்கப்படும் இந்த முள்ளெலி இனம், பெரும்பாலும் இந்தியாவின் வடபகுதியில் காணப்படுகிறது.
வாழிடம்
இந்த இன முள்ளெலியின் தாயகம் இந்தியாவும், பாகிசுதானும் எனக் கண்டறியப் பட்டுள்ளது. நன்கு உறுதி செய்யப்பட்ட வகைப்பாட்டியியல் காரணங்களால், இந்திய நீள்காது முள்ளெலி இனம், நீள்காது முள்ளெலி[note 3] யின், கீழ் இருக்கும் சிற்றினமாகக் கருதப் படுகிறது.
கடலிலிருந்து அலைகள் வந்து செல்லும், நிலப்பரப்பில் மட்டுமே இவை வாழ்கின்றன. குறிப்பாக, 15 மீட்டர் கடல் மட்ட உயரமுள்ள நிலப்பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன என்று இங்கிலாந்து கடலாய்வினர் கண்டறிந்துள்ளனர்.