இந்திய வெளிர் முள்ளெலி (Indian Hedgehog, விலங்கியல் இருசொற்பெயர் – Paraechinus micropus) என்றழைக்கப்படும் இம்முள்ளெலி இனம், பெரும்பாலும் வடஇந்தியாவின் பாலைவனப் பகுதியில் மட்டும் காணப்படுகிறது.
வாழிடம்
இந்தியாவும், பாகிசுதானும் இம்முள்ளெலிகளின் தாயகம் ஆகும். வட அமெரிக்காவில் காணப்படும் ரக்கூன் போன்று, இதன் முகம் அமைந்துள்ளது. இவ்விலங்கு நீர் வளத்திற்கு அருகே, தாவர வளமுள்ள மலை, சமவெளி போன்ற இடங்களில் வாழும் இயல்புடையது ஆகும்.
வளரியல்பு
மண்ணில் குழிபறிக்கும் குணம் உடைய இவ்விலங்கு, சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும் இயல்புடையது ஆகும். இதன் உடலின் நீளம் ~15 செ.மீ. இருக்கிறது. அவ்வுடலின் எடை ~200 – 350 கிலோகிராம் அளவுடையதாக இருக்கிறது.
இவ்வுயிரினம் தாவர உணவுகளுடன், தவளை, தேரை, பாம்பு, தேள் போன்றவைகளையும் உண்ணும் பழக்கம் உடையனவாக இருக்கிறது. உணவு இல்லாத போது, குளிர்கால ஒடுக்கம் மூலம் தனது வளர்சிதை மாற்றங்களைக் குறைத்துக் கொண்டு, நீண்ட நாள் உயிர் வாழும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றது.
வெளி இணைப்புகள்
இந்திய வெளிர் முள்ளெலி – விக்கிப்பீடியா