இந்திய ஓநாய் (ஆங்கிலப் பெயர்: Indian wolf, உயிரியல் பெயர்: Canis lupus pallipes) என்பது ஓநாயின் ஒரு துணையினம் ஆகும். இது தென்மேற்கு ஆசியாவில் இருந்து இந்தியத் துணைக்கண்டம் வரை காணப்படுகிறது. இது திபெத்திய மற்றும் அரேபிய ஓநாய்களுக்கு இடைப்பட்ட அளவில் காணப்படுகிறது. இதற்குத் திபெத்திய ஓநாயைப் போல் குளிர்கால உரோமம் கிடையது. ஏனெனில் இது வெப்பமான பகுதியில் வசிக்கிறது.
தங்க ஜாகால் 19 இலட்சம் YBP
கயோட்டி கோநாய் 11 இலட்சம் YBP
இமாலய ஓநாய் 630,000 YBP
இந்தியச் சாம்பல் ஓநாய் 270,000 YBP
ஹோலார்க்டிக் சாம்பல் ஓநாய் 80,000 YBP
நாய்
இந்தியத் துணைக்கண்டம்
2004ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இந்தியா முழுவதும் சுமார் 2000-3000 ஓநாய்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.