மதுரா கால்நடை (Madura cattle) அல்லது மதுரீசி கால்நடை (இந்தோனேசியம்: சபி மதுரா ) திடமான, செபு மற்றும் பேண்டெங் இடையே தோற்றுவிக்கப்பட்ட கலப்பினமாகும் (பாசு ஜாவானிகசு). இவை இந்தோனேசியாவின் ஜாவாவின் வடகிழக்கில் மதுரா தீவில் தோன்றின. இங்கே சிங்கள கால்நடைகளைப் போன்ற அசல் பாலினீசு கால்நடைகள் காணப்பட்டன. சிங்கள கால்நடையானது சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட செபு கால்நடை இனமாகும். கலப்பின மாடுகள் அசல் இனங்களை விட உடல் அளவில் சிறந்தவை என்று கண்டறியப்பட்டது. சில ஆதாரங்கள் செபுவானது இந்தியாவைச் சேர்ந்த ஓங்கோல் மாடு வகையின என்கின்றன. சிவப்புடன் பழுப்பு நிறத்தில், வெள்ளை வடிவ பின்புறமும் பிட்டத்துடன் காணப்படுகின்றன. இவை ஒரு சிறிய இனமாகும். காளைகள் 250 முதல் 300 வரையிலான எடையுடையன. இம்மாடுகள் உள்ளூர் மக்களால் போட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. இவை நடனமாடும் கால்நடைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. 2002ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் மதிப்பீட்டின்படி இந்த கால்நடைகளின் எண்ணிக்கை 900,000 என மதிப்பிடப்பட்டது. சபுடி தீவில் இந்த இனத்தினைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மதுரீசி காளை போட்டி
காளை பந்தயத்தில் இரண்டு காளைகள் ஒரு சிறிய இழுவை சவாரி அமைப்பில் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. இதில் ஒருவர் சமப்படுத்தி ஓட்டி செல்வார்.