மேட்டோ குரோசோ நாய்முக வெளவால் (Mato Grosso dog-faced bat)(நியோபிளாட்டிமோப்ஸ் மேட்டோக்ரோசென்சிஸ்), தென் அமெரிக்காவினைச் சார்ந்த ஓர் வெளவால் இனமாகும் . இது பிரேசில், கொலம்பியா, கயானா மற்றும் வெனிசுலாவிலும் காணப்படுகிறது .
வகைபாட்டியலும், சொற்பிறப்பியலும்
சி ஓ சி வியோரா என்பவர் 1942ஆம் ஆண்டு இந்த வெளவால் குறித்து முதன்முதலாக விவரித்திருந்தார். இந்த புதிய இனமானது பிரேசில் மாநில மாடோ குரோசோவின் வடபகுதியில் உள்ள ஜீரினா ஆற்றுப்பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்டது.
விளக்கம்
இது ஓர் சிறிய வகை வெளவால் ஆகும் . இதன் முன்கை நீளம் சுமார் 29–30 மிமீ ஆகும். இதனுடைய எடை 7–7.5 கிராம் ஆகும். ஆண் பெண் பாலின வேறுபாடுடைய இந்த வெளவாலில் ஆண்களைவிடப் பெண்கள் சிறியன. இதன் மண்டை ஓடு தட்டையான தோற்றத்தைக் கொண்டுள்ளது. முதுகுப் பகுதியில் காணப்படும் உரோமங்கள் பழுப்பு நிறமாகவும், வயிற்றுப்பகுதியில் வெண்மை அல்லது சாம்பல் நிறமாகவும் இருக்கும். ஆண், பெண், வெளவால்கள் குலார் சுரப்பியினைக் கொண்டுள்ளன . இதன் பல் சூத்திரம் 1.1.2.3 2.1.2.3 {\displaystyle {\tfrac {1.1.2.3}{2.1.2.3}}} ஆகும். மொத்தம் 30 பற்களைக் கொண்டுள்ளன
உயிரியலும் சூழலியலும்
மேட்டோ குரோசோ நாய்முக வெளவால் ஹரேம் எனப்படும் அந்தப்புர வகைச் சமூக அமைப்பைக் கொண்டிருக்கின்றன. வெனிசுலாவில், காணப்படும் இந்த வவ்வாலின் கூட்டமைப்பில் ஆண் ஒன்றும், இரண்டு முதல் நான்கு பெண்கள் வரை உள்ளன. பருவகால இனப்பெருக்கத் தன்மையுடைய இந்த வவ்வால்கள், ஆண்டுக்கு ஒருமுறை மழைக் காலத் தொடக்கத்தில் பிரசவிக்கின்றன. இந்த வவ்வால்கள் பூச்சிகளை உண்ணக்கூடியன.
வரம்பு மற்றும் வாழ்விடம்
பிரேசில், கொலம்பியா, கயானா, மற்றும் வெனிசுலா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் இந்த வெளவால் காணப்படுகிறது.
பாதுகாப்பு
2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது ஐ.யூ.சி.என் ஆல் குறைந்த அக்கறை கொண்ட இனமாக மதிப்பிடப்படுகிறது. இந்த வெளவால் பரந்த புவியியல் வரம்பைக் கொண்டுள்ளதால் இதனுடைய எண்ணிக்கை விரைவாகக் குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை.