கத்தூரி எருது (Ovibos moschatus) என்பது ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் ஒரு பாலூட்டியாகும். இது இதன் தடிமனான தோலுக்காக அறியப்படுகிறது. இது இனுக்ரிருற் மொழியில் உமிங்மக் என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் தாடியுள்ள ஒன்று என்பதாகும். இவை கிரீன்லாந்து, கனடாவின் வடமேற்கு நிலப் பகுதிகளின் மற்றும் நூனவுட்டின் ஆர்க்டிக் பகுதிகள் ஆகியவற்றில் காணப்படுகிறது. இவை சிறிய எண்ணிக்கையில் அலாஸ்கா, கனடாவின் யூக்கான், ஸ்காண்டிநேவியா மற்றும் சைபீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உசாத்துணை
வெளி இணைப்புகள்
கத்தூரி எருது – விக்கிப்பீடியா