வெளிறிய சாம்பல் மூஞ்சூறு (குரோசிடுரா பெர்க்ரிசியா – Crocidura pergrisea) என்பது பாலூட்டி வகையில் சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்ததாகும். இது பாக்கித்தானில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும். இதன் வாழ்விடம் இழப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
பரவல்
இந்த இனம் பாக்கித்தானில் மட்டுமே வாழக்கூடியது. பாக்கித்தானில் சிகார் பள்ளத்தாக்கு மற்றும் தியோசாயின் மேற்கு பகுதிகளில் காணப்படுகிறது.