வரிவால் லெமூர் முதனி வகையைச் சேர்ந்த ஒரு லெமூர். இது நீண்ட கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட வாலினைக் கொண்டுள்ளதால் லெமூர்களிலேயே நன்கு அறியப்பட்டதாக இருக்கிறது. இது லெமூர் குடும்பத்தைச் சேர்ந்தது. மற்ற லெமூர்களைப் போலவே மடகாட்கர் தீவினைத் தாயகமாகக் கொண்டது. இவை தீவின் தென்பகுதியில் வசிக்கின்றன. இது பகலில் இரைதேடும் ஒரு அனைத்துண்ணியாகும்.
இவை சமூக விலங்குகள். 30 வரையான உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமாக வசிக்கின்றன. இது தன் இயல்பிடத்தில் 16 முதல் 19 ஆண்டுகள் வரையும் மனிதர்களால் பிடிக்கப்பட்டு வளர்க்கப்படும் இடங்களில் 27 ஆண்டுகள் வரையும் வாழ்கின்றன.
வெளி இணைப்புகள்
வரிவால் லெமூர் – விக்கிப்பீடியா