சிவந்த கீரி

சிவந்த கீரி (Ruddy mongoose) (கெர்பெசுடெசு சுமிதி Herpestes smithii) என்பது இந்தியா மற்றும் இலங்கை மலைக் காடுகளில் வளரக்கூடிய கீரி வகைகளுள் ஒன்றாகும். இந்த கீரி, கழுத்தில் பட்டையுடன் காணப்படும் கீரி மற்றும் இந்தியச் சாம்பல் கீரி முதலியன இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படும் கீரி இனங்களாகும். சிவந்த கீரி இந்தியச் சாம்பல் கீரி இனத்துடன் மிகவும் நெருக்கமான தொடர்புடையது; ஆனால் சற்றே பெருத்த அளவு மற்றும் கறுப்பு-முனை வால், 2 முதல் 3 அங்குலங்கள் வரை முடிவில் நீண்டு காணப்படுவதன் அடிப்படையில் வேறுபடுகிறது. இந்த கீரியில் இரண்டு கிளையினங்கள் உள்ளன. இவை இந்தியாவில் காணப்படும் கெ. சுமிதி சுமிதி, மற்றும் இலங்கையில் காணப்படும் கெ. சுமிதி ஜெய்லானிக்கசு (தாமஸ், 1852) ஆகும்.


பரவலும் வாழ்விடமும்


சிவந்த கீரி காடுகளில் வாழக்கூடியது. அதிக ஒதுங்கிய பாதுகாப்பான பகுதிகளை விரும்புகிறது. இது நெல் வயல்களிலும், ஒப்பீட்டளவில் திறந்தவெளிகளிலும் காணப்படுகிறது.


வகைபிரித்தல்


இலண்டன், இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் தொகுப்பில் ஒரு விலங்கியல் மாதிரிக்காக 1837ஆம் ஆண்டில் ஜான் எட்வர்ட் கிரே என்பவரால் முன்மொழியப்பட்ட இருசொற் பெயர் ஹெர்பெசுடசு சுமிதி என்பதாகும்.


கிளையினங்கள்


  • ஹெ. சுமிதி

  • ஹெ. தயசானுரசு

  • ஹெ. செலானியசு

  • சூழலியல்


    பிற கீரிகளைப் போலவே, இது பகலிலும் இரவிலும் வேட்டையாடுகிறது.


    கலாச்சாரத்தில்


    இலங்கையில் இந்த விலங்கு சிங்களத்தில் முகாட்டியா என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இது விரும்பத்தகாத விலங்காகக் கருதப்படுகிறது. இலங்கைக்குச் சொந்தமான வேறுபட்ட சிற்றினமான பொன்னிற மரநாய் (பாரடோக்சுரசு ஜெய்லோனென்சிசு), இதே போன்று தோற்றம் மற்றும் வண்ணம் கொண்டது, கோட்டம்புவா என்று அழைக்கப்படுகிறது.


    வெளி இணைப்புகள்

    சிவந்த கீரி – விக்கிப்பீடியா

    Ruddy mongoose – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published.