மூஞ்சூறு என்பது எலி வகையின் ஒரு இனமாகும். இந்தியாவில் சில மனிதர்கள் இவ்வகை எலியினை (மூஞ்சூறு) விநாயகரின் வாகனம் என்றும் அழைப்பார்கள். இந்த எலிகள் வீட்டில் வாழ்பவை. உடல் சற்று நீண்டும், தலைப் பகுதி கூராகவும், வால் குட்டையாகவும் இருக்கும். இவை வீட்டில் சிந்திய உணவுகளை உண்டு வாழ்பவை. இடையூறு ஏற்படும்போது இவை கீச், கீச் என்று ஒலி எழுப்பும். இதன் உடலில் ஒருவித நாற்றம் வீசும். வீட்டின் சுவர் ஓரமாகவே ஓடும். இந்த எலிகள் மக்களுக்கு எவ்வித சேதங்களையும் ஏற்படுத்துவது இல்லை. அதனால் இந்த எலிகளை யாரும் கொல்வதில்லை பெட்டி, அலமாரி, கட்டில், தொம்பை (தானியங்களை சேமித்து வைக்கும் குதிர்) ஆகிய இடங்களில் மறைந்து வாழும்.
About the author
Related Posts
October 7, 2021
கருப்புத் தலை சின்னான்
September 20, 2021
சிற்றாமை
September 20, 2021