பெரிய தேவாங்கு என்பது இரவில் இரை தேடும் ஒரு சிறு பாலூட்டி ஆகும். சற்றும் தொடர்பில்லாத விலங்கு போல் தோற்றம் அளித்தாலும், இது மனிதர்களும், குரங்குகளும் உள்ள முதனி என்னும் வரிசையைச் சேர்ந்த விலங்காகும் இதில் பல குழு இனங்கள் உள்ளன. இவை தென்கிழக்கு ஆசியாவில் வங்கதேசம், வடகிழக்கு இந்தியா, மேற்கில் சுலு தீவுத்தொகுப்பு உள்ள கிழக்கு பிலிப்பைன்ஸ், சீனாவின் யுனான் மாகாணம், ஜாவா தீவின் தெற்கு ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
இவை உருண்டையான தலை, குறுகிய முகவாய், பெரிய கண்கள், மற்றும் உருண்டு திரண்டு காட்சியளிக்கும் உடலும்,கண்களைச் சுற்றி கருப்பழுப்பு வண்ண வளையமும், மொட்டைவால் கொண்டும் இருக்கும். இவை இனங்கள் சார்ந்த தனித்துவமான நிறத்தை வடிவத்தை பெற்றுள்ளன. இவற்றின் கைகள், கால்கள் நீளம் கிட்டத்தட்ட சம அளவில் உள்ளன. இவற்றின் உடல் நீளமாக இருப்பதால், இவை விரும்பியவாறு திரும்பி அருகிலுள்ள கிளைகளை பிடிக்க வசதியாக உள்ளது. இதன் கைகள் கால்கள் ஆகியன பிடிப்புத்திரண் உள்ளதாக இருக்கின்றன. இதனால் நீண்ட நேரத்திற்கு மரக் கிளைகளை பிடித்து தழுவிக் கொண்டிருக்க இயலுகிறது. பழங்கள் பூச்சிகள், சிறுசெடி கொடிகளை உணவாக உட்கொள்கிறது.
வெளி இணைப்புகள்
பெரிய தேவாங்கு – விக்கிப்பீடியா