வரிக் கழுதைப்புலி (striped hyena, Hyaena hyaena) என்பது வட அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், காகசஸ், மத்திய ஆசியா மற்றும் இந்திய துணைக் கண்டம் ஆகிய இடங்களில் காணப்படும் ஒரு விலங்காகும். இது வேகமாக அழிந்து வரக்கூடிய இனமாக ஐ.யூ.சி.என் என்ற அமைப்பால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பரந்து காணப்படும் இவ்வகை விலங்குகள் தற்செயலாகவோ, வேண்டுமென்றோ தொடர் துன்புறுத்துதலுக்கு ஆளாகின்றன. மேலும், இதன் அடுத்தடுத்த தலைமுறைகளில் 10 சதவிகித விலங்குகள் தொடர்ச்சியான அழிவாய்ப்பை நோக்கி சென்றுகொண்டுள்ளது எனத்தெரிய வருகிறது.
பொதுவாக இவ்வகை கழுதைப்புலிகள் உருவத்தில் மிகச் சிறிதாகக் காணப்பட்டாலும், பேரினங்கள் இழந்த சில பாலூட்டியின் குணங்களை பழமை மாறாமல் அப்படியே கொண்டுள்ளது. மிகச்சிறிய தலையைக் கொண்ட இவைகள் ஒவ்வொன்றும் உணவுக்காக தனித்தனியே விலங்குகளை வேட்டையாடும் குணத்தை கொண்டிருக்கும். மிக அரிதான நிகழ்வுகளிலேயே மனிதர்கள் மீது இதன் தாக்குதல் இருக்கும். கோடிட்ட கழுதைப்புலி என்பது ஒரு இணையுடனே வாழும் விலங்காகும். ஆண் மற்றும் பெண் கழுதைப்புலிகள் தங்கள் குட்டிகளை வளர்ப்பதில் ஒன்றுக்கொன்று உதவிக்கொள்கின்றன. கோடிட்ட கழுதைப்புலிகள் பொதுவாக முழுமையான இருட்டில் மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். சூரிய உதயத்திற்கு முன்பு மீண்டும் அதன் குகைக்குள் சென்று விடும். பொதுவாக இறந்த அல்லது சாகும் தருவாயிலுள்ள விலங்குகளையே உணவாகக் கொண்டாலும் மிகப்பெரிய விலங்குகளுடனான போட்டியில் தனித்தே போராடும்.
மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளின் உட்புறங்களிலும் கோடிட்ட கழுதைப்புலிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சில பகுதிகளில், இவற்றின் குரல் மற்றும் உடல் பாகங்களைப் பற்றி பல மாயாஜால கதைகள் உலாவுகின்றன.
மேலும் இவ்விலங்கினைப் பற்றி “செபுஉவா” அல்லது “சிவோவா” என எபிரெய பைபிளில் குறிப்புகள் காணப்படுகிறது, இருப்பினும் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பைபிள்களில் இக்குறிப்புகள் காணப்படவில்லை. பண்டைய கிரேக்கர்கள் இதை “க்ளானோஸ்” மற்றும் “இனா- ஹைனா” என்று குறிப்பிடுவது தெரிய வருகிறது. மேலும் ஆசியா மைனர் பகுதியின் ஏஜீயான் கடற்பிரதேசங்களிலும் இதைப் பற்றிய தகவல்கள் அறிய வருகின்றன.
வெளி இணைப்புகள்
வரிக் கழுதைப்புலி – விக்கிப்பீடியா