உராங்குட்டானின் இரண்டு வகைகளில் ஒன்றுதான் சுமத்திரா உராங்குட்டான் (பொங்கோ அபேலி) ஆகும். இது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மட்டுமே காணப்படுகிறது, இது பாோ்னியன் உராங்குட்டானை விட அரிதாகக் காணப்படுகிறது. இதன் பொதுவான பெயர் இரண்டு வேறுபட்ட உள்ளூர் மொழிச் சொற்களிலிருந்து உருவானது. அந்தச் சாெற்கள் “உராங்” (“மக்கள்” அல்லது “நபர்”) மற்றும் “ஹூட்டன்” (“காடுகள்”) என்பவையாகும். இவற்றிலிருந்து ‘காட்டு மனிதன்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஆண் குரங்கு 1.4 மீ (4.6 அடி) உயரமும், 90 கிலோ (200 பவுண்டு) எடையும் காெண்டது. ஆணைவிடப் பெண் குரங்கு சராசரியாக 90 செமீ (3.0 அடி) மற்றும் 45 கிலோ (99 பவுண்டு) சிறியது. பாோ்னியன் இனத்துடன் ஒப்பிடும்போது, சுமத்திரன் உராங்குட்டான் மெல்லிய மற்றும் நீண்ட முகங்கள் காெண்டது; இவற்றின் தலைமுடி மிகவும் நீளமாகவும், சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
நடத்தை மற்றும் சூழல்
சுமத்திரன் உராங்குட்டானை பாோ்னியன் உராங்குட்டானுடன் ஒப்பிடுகையில், சுமத்ரான் உராங்குட்டான் பழம் உண்ணியாகவும், புச்சி உண்ணியாகவும் இருக்கின்றன. இவைகளுக்கு விருப்பமான பழங்கள் அத்தி மற்றும் பலாப்பழம் ஆகும். மேலும் இது பறவைகளின் முட்டைகள் மற்றும் சிறிய முதுகெலும்பிகள் ஆகியவற்றையும் உண்கின்றன. இவை மரங்களின்மேல் இருந்து உண்பதற்குச் சிறிது நேரத்தையே செலவழிக்கின்றன.
வெளி இணைப்புகள்
சுமத்ராவின் உராங்குட்டான் – விக்கிப்பீடியா
Sumatran orangutan – Wikipedia