அபோ வெளவால் (Abo Bat) (கிளகோனிக்டெரிசு போயென்சிசு) என்பது வெசுபெர்டிலியோனிடே குடும்பத்தில் உள்ள வெஸ்பர் வெளவால் ஆகும். இது மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆபிரிக்காவில் காணப்படுகிறது. இதன் வாழ்விடங்களாக மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடு மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகளாகும்.
வகைபிரித்தல் மற்றும் சொற்பிறப்பியல்
இதனை ஒரு புதிய சிற்றினமாக 1842இல் இங்கிலாந்து விலங்கியல் நிபுணர் ஜான் எட்வர்ட் கிரே விவரித்தார். கிரே இந்த சிற்றினத்தை கெரிவவுலா என்ற புதிய பேரினத்தில் கெரிவுலா போயென்சிசு என்ற சிற்றினப் பெயருடன் வைத்தார். இதன் சிற்றினப்பெயரான “போயென்சிஸ்” என்பது “போவைச் சேர்ந்தது” எனப் பொருள்படும். பெர்னாண்டோ போவிலிருந்து இதன் ஹோலோவகை சேகரிக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
இதன் உரோமங்கள் மஞ்சள்-சாம்பல் நிறத்தில் இருக்கும்.
வரம்பு மற்றும் வாழ்விடம்
இது மேற்கு மற்றும் நடு ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் காணப்படுகிறது, இதில் பெனின், கமரூன், காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கோட் டிவார், எக்குவடோரியல் கினி, கானா, கினி, லைபீரியா, நைஜீரியா, செனிகல், சியரா லியோனி மற்றும் டோகோ ஆகியவை அடங்கும்.
பாதுகாப்பு
இது தற்போது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த வெளவால் மிகப் பெரிய புவியியல் வரம்பைக் கொண்டுள்ளது; மேலும் இதன் எண்ணிக்கையும் அதிக அளவில் காணப்படுவதோடு எண்ணிக்கையில் வீழ்ச்சி இருக்க வாய்ப்பில்லை.