அல்பைன் கத்தூரி மான்

அல்பைன் கத்தூரி மான் (Alpine musk deer)(மோசசு கிரைசோகாசுடர்) என்பது நேபாளம், பூட்டான் மற்றும் இந்தியாவில் உள்ள கிழக்கு இமயமலை பகுதிகளிலும் திபெத்தின் மலைப்பகுதிகளிலும் காணப்படும் கத்தூரி மான் இனமாகும்.


இமயமலை அடிவாரத்தில் காணப்படும் ஆல்பைன் கத்தூரி மானானது தற்போது தனி இனமாகக் கருதப்படுகிறது. இது இமயமலை கத்தூரி மான் எனப்படுகிறது. அல்பைன் கத்தூரி மான் உத்தராகண்டத்தின் மாநில விலங்காகும்.


வகைப்பாட்டியல்


அல்பைன் கத்தூரி மான் மொசிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த குடும்பம் போவிடே மற்றும் செர்விடே ஆகியவற்றை உள்ளடக்கிய கிளேட்டின் ஒரு பகுதியாகும். இது ஜிராஃபிடேவின் சகோதர குழுவாகும். இவை அனைத்தும் ஆர்டியோடாக்டைலா என்ற வரிசையில் ரூமினேடியாவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆய்வுகள் ஆர்டியோடாக்டைல்களுக்கும் சீட்டேசியன்களுக்கும் இடையிலான உறவைக் காட்டியுள்ளன. இவையிரண்டும் செர்டியோடாக்டைலா வரிசையில் இணைக்கப்பட்டுள்ளன.


இந்த சிற்றினத்தில் இரண்டு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:


 • மொ. கி. கிறைசோகாசுடர் – திபெத்தின் தென்பகுதி, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டம், சிக்கிம், நேபாளம் மற்றும் பூட்டான்

 • மொ. கி. சிபேனிகசு – கிங்காய் மாகாணம், கான்சு, நின்ஷியா தன்னாட்சிப் பகுதி, மேற்கு சிச்சுவான் மற்றும் வடமேற்கு யுன்னான்

 • பண்புகள்


  அல்பைன் கத்தூரி மான், சிறிய வகை மான் ஆகும். இதனுடைய உயரம் 40 முதல் 60 செ.மீ. ஆகும். வாய்க்குள் மறையாத நீண்ட கோரைப் பல் மேல் தாடையில் காணப்படும். ஆண் விரைகளுக்கிடையே வெளிப்புறமாகத் தெரியும் வகையில் கத்தூரி சுரப்பு பை காணப்படும். கோரைப் பற்கள் இனச்சேர்க்கை காலத்தில் வளருகின்றது. இது பிற ஆண்களைத் தூண்டுவதற்குப் பயன்படுகிறது.


  பரவலும் வாழிடமும்


  அல்பைன் கத்தூரி மான் மேற்கு சீனா, திபெத், சிச்சுவான் மற்றும் கான்சு பகுதிகளில் 3,000–5,000 m (9,800–16,400 ft) உயரத்தில் ஊசியிலைக் காடுகள் மற்றும் இலையுதிர் காடுகளில் வாழ்கிறது. நேபாளத்தில் காப்தாட், சாகர்மாதா, ஷெ-போக்ஸூன்டு, லங்டாங், மக்காலு பருன் தேசிய பூங்காக்கள், அன்னபூர்ணா, கஞ்சன்ஜங்கா பாதுகாப்பு பகுதிகள் மற்றும் டோர்படன் வேட்டை பாதுகாப்பு பகுதி. 2015ஆம் ஆண்டு கிழக்கு பூட்டானின் சக்தெங் காட்டுயிர் காப்பகத்தில் 3,730–4,227 m (12,238–13,868 ft) உயரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


  மலைக் குகைகள் மற்றும் புதர்கள் இவற்றின் சிறந்த வாழ்விடமாக அமைகின்றன. தென்மேற்கு சீனாவின் பைமா சூஷான் இயற்கை பாதுகாப்பு பகுதியில், அல்பைன் கஸ்தூரி மான் கருவாலி புதர்கள், கருவாலி காடுகள் மற்றும் திறந்த விதான பகுதிகளை விரும்புகிறது.


  நடத்தை மற்றும் சூழலியல்


  அல்பைன் கத்தூரி மான் அசைபோடும் தாவர உண்ணி வகை விலங்காகும். இவை முதன்மையாக ஃபோர்ப்சு, புல், பாசி, இலைச்சென் மற்றும் துளிர்கள், இலைகள் மற்றும் புதர்களின் கிளைகள் ஆகியவற்றை உண்கிறது.


  ஆண்கள், வளங்கள் மற்றும் சமூக அந்தஸ்துக்காகப் போட்டியிடுகிறார்கள். மிக உயர்ந்த நிலையில் இருப்பற்றுக்கு உணவு, தங்குமிடம், பிரதேசம் மற்றும் இனப்பெருக்க உரிமைகள் போன்ற வளங்களுக்கான முதன்மை அணுகல் உள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மற்றும் காட்டுக் கத்தூரி மான் இரண்டும் வளங்களுக்காகப் போட்டியிடுகின்றன. இந்த போட்டியின் போது தலையுடன் தலையினை ஆக்குரோசமாக மோதுகின்றன. தங்களுடைய பலத்தினையும், இருப்பிட எல்லையினைக் காட்ட கத்தூரியினை தெளிக்கின்றன. மந்தை விலங்குகளிடையே ஆதிக்க நிலையினை நிறுவ நடைபெறும் போட்டியில் பெரும்பாலும் உடல் காயமும் சில நேரங்களில் மரணம் கூட நிகழலாம். சிறைபிடிக்கப்பட்ட கத்தூரி மான்களில் மென்மையானவையாக உள்ளன. இந்த இனத்திற்கான அச்சுறுத்தல்களாக, இடமாற்றம் மற்றும் சடங்கு காட்சிகள் அடங்கும். தீவிர மோதலின் போது, ஒரு மான் அடங்கிச் செல்வதன் மூலமோ, இறத்தல் அல்லது வெற்றியாளரால் மற்றொரு மான் துரத்தப்படுவதன் மூலம் மோதலுக்கு முடிவு எட்டப்படுகிறது. அல்பைன் கத்தூரி மானின் இனச்சேர்க்கை காலம் நவம்பர் பிற்பகுதியிலும், குட்டி ஈனும் காலம் ஜூன் முதல் ஜூலை வரையிலும் இருக்கும். இவை தனி விலங்குகள் என்பதால், வளரிடக் கவனிப்பது கடினமானது.


  அச்சுறுத்தல்கள்


  அல்பைன் கத்தூரி மானுக்கு முக்கிய அச்சுறுத்தல் அதன் கத்தூரிக்காக வேட்டையாடுவது. இது அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. கத்தூரிக்கான வேட்டையாடுதல் மற்றும் தொடர்ச்சியான தேவை நேபாளம் மற்றும் உத்தராகண்டம் மாநிலங்களில் முக்கிய அச்சுறுத்தலாகும். ஆசிய மருத்துவத்திலும் கத்தூரி பயன்படுத்தப்படுகிறது. சட்டவிரோத வேட்டை மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக, அல்பைன் கத்தூரி மான் சீனாவில் ஆபத்தான உயிரினமாக மாறியுள்ளது. வாழ்விட அழிவு மறைவிடங்களைக் குறைக்க வழிவகுக்கிறது மற்றும் கத்தூரி மான்களுக்கான வேட்டையாடும் அணுகலை அதிகரிக்கும். மனிதர்களின் குறுக்கீடு காரணமாக அல்பைன் கத்தூரி மான்களின் வாழ்விடம் துண்டு துண்டாகி உள்ளது.< ஜப்பான் கத்தூரியின் மிகப்பெரிய இறக்குமதியாளராக இருந்து வருகிறது.


  கத்தூரி பல்வேறு மருந்து தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. செயற்கை கத்தூரி உருவாக்கப்பட்டிருந்தாலும், அது இயற்கை கத்தூரியின் பயன்பாட்டை முழுமையாக மாற்றவில்லை. ஆசியாவிற்கு வெளியே கூட கத்தூரியின் தேவை அதிகரித்து வருகிறது.[சான்று தேவை] அல்பைன் கத்தூரி மான் பல நூற்றாண்டுகளாக வேட்டையாடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த நூற்றாண்டில் துப்பாக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் வேட்டை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கண்ணி பொறிகளைப் பயன்படுத்துவதுவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இப்பொரியின் இலக்கு கத்தூரி மான் அல்ல. கத்தூரிக்கான தேவை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளதால், கத்தூரி மான் பண்ணைகளிலிருந்து வழங்கலை விட அதிகமாகிவிட்டது, எனவே இயற்கையாக வாழும் கத்தூரி மானின் மீதான தாக்கம் அதிகரித்துள்ளது.[சான்று தேவை]


  பாதுகாப்பு


  1958ஆம் ஆண்டில், சீனாவில் அல்பைன் கத்தூரி மான் பண்ணைகள் தொடங்கப்பட்டன. 1980களின் முற்பகுதியில், இந்த பண்ணைகள் சுமார் 3,000 கத்தூரி மான்களை வைத்திருந்தன. இந்த பண்ணைகள் பல வெற்றிகரமாக இல்லாததால் ஒரு சில இனப்பெருக்க மையங்கள் மட்டுமே 1990களில் அல்பைன் கத்தூரி மான்களை வளர்த்தன. எவ்வாறாயினும், இந்த பண்ணைகள் இயற் சூழலில் உள்ள கத்தூரி மான்களுக்கு எத்தகைய பாதுகாப்பினை அளித்தன என்பதற்குச் சான்றுகள் இல்லை.


  வளரிடத்தில்


  அல்பைன் கத்தூரி மான் தனித்து வாழக்கூடிய, கூச்ச சுபாவமுள்ள இனம் என்பதால், வாழிடச் சூழலில் வளர்ப்பதும், இனப்பெருக்கம் செய்வதும் கடினம். சீன கத்தூரி மான் பண்ணைகளிலிருந்து வரும் அறிக்கைகள் காடுகளிலிருந்து சிறைபிடிக்கப்பட்ட மான்கள் அதிக இறப்பு விகிதத்தைக் காட்டுகின்றன என்றும் அதன் ஆயுட்காலம் 4 வருடங்களுக்கும் குறைவானது என்றும் இது வனப்பகுதியில் கத்தூரி மானைவிடக் குறைவு என்றும் தெரிவிக்கின்றன. சிறைபிடிக்கப்பட்ட மற்றும் காட்டு மான்களின் நடத்தை ஆய்வுகள் சிறைபிடிக்கப்பட்ட மான்களில் குறைந்த வளர்ப்பு விகிதத்தையும், வளரிடத்தில் பிறந்த மான்களைக் காட்டில் விட்டால் அதிக வளர்ச்சியினையும் காண்பித்துள்ளது


  வெளி இணைப்புகள்

  அல்பைன் கத்தூரி மான் – விக்கிப்பீடியா

  Alpine musk deer – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.