ஆசிய நீர் மூஞ்சூறு (Asiatic water shrew) என்பது சிமரோகலே பேரினத்தினைச் சார்ந்த சிற்றினங்கள் ஆகும். பாலூட்டிகள் வகுப்பினைச் சார்ந்த இந்த மூஞ்சூறு சோரிசிடே குடும்பத்தில் உள்ள சோரிஜினே உட்குடும்பத்தினைச் சார்ந்தவை. இவை நீர்வாழ்வன, சில சிற்றினங்கள் நீரோடைகளில் வசிக்கின்றன. இந்தப் பேரினத்தின் கீழ் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன:
மலேயா நீர் மூஞ்சூறு (சிமரோகலே கந்து)
இமயமலை நீர் மூஞ்சூறு (சிமரோகலே ஹிமாலிகா)
போர்னியன் நீர் மூஞ்சூறு (சிமரோகலே பாயுரா)
ஜப்பானிய நீர் மூஞ்சூறு (சிமரோகலே பிளாட்டிசெபாலசு)
சீன நீர் மூஞ்சூறு (சிமரோகலே ஸ்டைனி)
சுமத்ரா நீர் மூஞ்சூறு (சிமரோகலே சுமத்ரானா)
வெளி இணைப்புகள்
ஆசிய நீர் மூஞ்சூறு – விக்கிப்பீடியா
Asiatic water shrew – Wikipedia