கருப்பு கழுதை குழி முயல் (ஆங்கிலப்பெயர்: Black jackrabbit, உயிரியல் பெயர். Lepus insularis) என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி ஆகும். மெக்சிகோவை பூர்வீகமாக கொண்ட இந்த முயல் கலிபோர்னியா வளைகுடாவின் எசுபிரிடு சான்டோ தீவில் மட்டுமே காணப்படுகிறது. சிலர் இம்முயலை கருப்பு வால் கழுதை குழிமுயலின் துணையினமாக கருதுகின்றனர்.
வெளி இணைப்புகள்
கருப்பு குழிமுயல் – விக்கிப்பீடியா