கருப்பு வால் கழுதை குழிமுயல் (ஆங்கிலப்பெயர்: Black-tailed Jackrabbit, உயிரியல் பெயர்: Lepus californicus) அல்லது அமெரிக்க பாலைவன முயல் என்பது மேற்கு ஐக்கிய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் காணப்படும் ஒரு பொதுவான முயல் ஆகும். அங்கு இது கடல் மட்டத்திலிருந்து 10,000 ft (3,000 m) உயரம் வரை காணப்படுகின்றது. இது 2 ft (61 cm) நீளம் வரையும் எடை 3 முதல் 6 lb (1.4 முதல் 2.7 kg) வரையும் வளரக்கூடியது. வட அமெரிக்காவின் முயல்களிலேயே இதுதான் மூன்றாவது பெரிய முயல் ஆகும். இது புதர்-புல்வெளி கலந்த நிலப்பகுதிகளில் வாழ்கிறது. பிறக்கும் குட்டிகள் உடல் முழுவதும் ரோமத்துடன் கண்கள் திறந்தவாறு பிறக்கின்றன. பிறந்த உடனேயே சில நிமிடங்களிலேயே இவற்றால் ஓட முடியும். இதன் காரணமாக பெண் முயல்கள் குட்டிகளை பாதுகாக்க தேவையில்லை. உணவு ஊட்டும் நேரம் தவிர மீதி நேரங்களில் அவற்றுடன் தங்கியிருக்க கூட தேவையில்லை. சராசரியாக இவை 4 குட்டிகளை ஈனுகின்றன. ஆனால் சில நேரங்களில் மிகக் குறைவாக இரண்டு குட்டிகளை கூட ஈனும். வெப்பமான காலநிலை கொண்ட பகுதிகளில் அதிகபட்சமாக 7 குட்டிகள் வரை கூட ஈனுகின்றன.
About the author
Related Posts
October 8, 2021
தாமிர இறக்கை இலைக்கோழி
September 30, 2021
பாறு பருந்து
October 7, 2021