துடைப்ப முயல் (ஆங்கிலப்பெயர்: Broom hare, உயிரியல் பெயர்: Lepus castroviejoi) என்பது வடக்கு ஸ்பெயினில் காணப்படும் ஒரு வகை முயல் ஆகும். இது வடக்கு ஸ்பெயினின் செரா டோஸ் அங்கரேஸ் மற்றும் செரா டி பெனா லப்ரா பகுதிகளுக்கு இடைப்பட்ட கன்டப்ரியன் மலைகளில் மட்டுமே காணப்படுகிறது. இப்பகுதி கிழக்கிலிருந்து மேற்காக 230 km (140 mi) நீளமும் மற்றும் வடக்கிலிருந்து தெற்காக 25–40 km (16–25 mi) நீளமும் உள்ளது. இது மலைப் பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 2,000 m (6,600 ft) உயரம் வரை காணப்படுகின்றது. எனினும் குளிர்காலத்தில் குளிர்ந்த வெப்ப நிலை மற்றும் பனியை தவிர்ப்பதற்காக மலைப்பகுதியிலிருந்து கீழே இறங்குகிறது.
வெளி இணைப்புகள்
துடைப்ப முயல் – விக்கிப்பீடியா