முனை முயல் (ஆங்கிலப்பெயர்: Cape hare, உயிரியல் பெயர்: Lepus capensis), அல்லது பாலைவன முயல் என்பது ஆப்பிரிக்கா, அரேபியா மற்றும் இந்தியா வரை காணப்படும் ஒரு முயல் ஆகும்.
பண்புகள்
முனை முயலானது ஒரு பொதுவான முயல் ஆகும். தாவுவதற்கும் ஓடுவதற்கும் இதன் கால்கள் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளன. தன் சூழ்நிலையில் ஏற்படும் ஆபத்துக்களை கண்டுகொள்வதற்காக இதற்கு பெரிய கண்கள் மற்றும் காதுகள் அமைந்துள்ளன. பொதுவாக இதன் கண்ணை சுற்றி ஒரு வெள்ளை வளையம் காணப்படுகிறது. இதற்கு ஒரு நல்ல மிருதுவான ரோமம் காணப்படுகிறது. அதன் நிறம் வெளிர் பழுப்பு முதல் சிவப்பு முதல் மணல் சாம்பல் நிறத்தில் வேறுபடுகின்றது. பாலூட்டிகளில் அசாதாரணமாக இம்முயல்களில் பெண் முயல்கள் ஆண் முயல்களை விட பெரியதாக உள்ளன.