தெரசா ஆடு என்பது இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்த நிகோபார் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ள தெரசா தீவில் இனம் கண்டறியப்பட்ட ஆடு ஆகும். தற்போது இந்த வகை ஆடுகள் தெரசா, பம்பூகா, கார்நிகோபார் , கட்சால் தீவுகளில் பரவிக் காணப்படுகின்றன. இவை ஊரின் பொது மேய்ச்சல் நிலத்தில் மேயவிட்டு வளர்க்கப்படுகின்றன. மிகவும் வளரும் இந்த தெரசா இன ஆடுகள், பொதுவாக ஆறு மாதத்துக்குள் பருவத்தை எட்டிவிடுகின்றன. இவை ஒருமுறைக்கு இரண்டு அல்லது மூன்று குட்டிகள்வரை ஈனும். வளர்ந்த ஆடு 50 முதல் 60 கிலோ எடையைக் கொண்டிருக்கும். இந்த ஆடுகள் நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவை.
About the author
Related Posts
September 30, 2021
உண்மையான ஆந்தை
September 23, 2021
சிவப்பு கந்திரி மாடு
October 8, 2021