மக்னா யானை

மரபணு குறைபாட்டால் தந்தம் வளராத தன்மையோடு பிறக்கும் ஆசிய ஆண் யானைகள் மக்னா யானை எனப்படுகின்றன. மனிதர்களில் சிலரைப் போல, மூன்றாம்பாலினமாக பிறந்த யானைகள்தான் மக்னா என்று அழைப்பர். காடுவாழ் மக்கள் இதனை மோழ யானை என்கிற பெயரில்தான் குறிப்பிடுகின்றனர். தந்தம் கொண்ட ஆண் யானைகளுடன் மட்டுமே பெண் யானகள் இணை சேருகின்றன. தந்தம் இல்லாத மக்னா யானைகளுடன் பெண் யானைகள் இணை சேர்வதில்லை. மற்றும் இவற்றை ஆண் யானைகள் தங்கள் கூட்டத்தில் சேர்ப்பதில்லை. தந்தமற்ற மக்னா யானைகள் பிற பெண் மற்றும் ஆண் யானைகளின் கூட்டங்களிலிருந்து விலக்கி வைக்கப்படுவதால், இவைகள் தனியாக வாழ்கின்றன என விலங்கியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். தந்தமற்ற மக்னா யானையால், எந்தக்கூட்டத்திலும் சேர்ந்து வாழ முடியாததால் இவை மூர்க்கத்தனத்தனமாக நடந்து கொள்ளும். பல சமயங்களில் எதிர்ப்படும் மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் தாக்கும் குணம் கொண்டவையாக இருக்கும் என்கிறார்கள் யானை ஆர்வலர்கள். மிகவும் மூர்க்கத்தனமான மக்னா யானையை, வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்து யானை முகாம்களில் வளர்க்கும் போது இயல்பாக காணப்படுகின்றன.


மக்னா யானையின் தோற்றம்


தந்தமுள்ள ஆண் யானையை விட, மக்னா யானையின் தலைப்பகுதியும், நெற்றிப் பகுதியும் நன்கு பெரிதாக இருக்கும். வாலிற்குக் கீழே சற்று புடைத்த நிலையிலிருக்கும் தோற்றத்துடன் காணப்படும். பெண் யானைக்கு அந்த இடம் உள் வாங்கி குழி போன்ற அமைப்பில் இருக்கும். மக்னாவானது, சாதாரணமான ஆண் யானைகளை விட, பலமுள்ளதாகவும், கொஞ்சம் பெரியதாகவும் காணப்படும். தந்தம் இல்லாத நிலையில் கூட, உடல் வலிமை கூடியதான உடலமைப்பை இயற்கை மக்னா யானைக்கு வழங்கியுள்ளது.

வெளி இணைப்புகள்

மக்னா யானை – விக்கிப்பீடியா

About the author

Leave a Reply

Your email address will not be published.