எத்தியோப்பிய முயல்

எத்தியோப்பிய முயல் (ஆங்கிலப்பெயர்: Ethiopian Hare, உயிரியல் பெயர்: Lepus fagani) என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி ஆகும். இது முதன்முதலில் 1903 ஆம் ஆண்டு பிரித்தானிய பாலூட்டியியலாளர் ஓல்ட்ஃபீல்ட் தாமசால் விளக்கப்பட்டது. இதன் முதுகுப்புற ரோமம் பழுப்பு நிறம் மற்றும் அழகான கருப்பு நிறத்துடன் காணப்படும். இதன் கீழ்ப்புற ரோமமானது பஞ்சு போன்று வெள்ளை நிறத்தில் காணப்படும். இது ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகிறது. இது எத்தியோப்பியாவின் ஆப்பிரிக்க மலை சார்ந்த உயிரிப்பகுதி, மற்றும் சூடானின் சவானா உயிரிப்பகுதியின் எல்லையில் காணப்படுகிறது. இது தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்று பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் தரப்படுத்தப்பட்டுள்ளது.


வெளி இணைப்புகள்

எத்தியோப்பிய முயல் – விக்கிப்பீடியா

Ethiopian hare – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.