ஜப்பானிய முயல் (ஆங்கிலப்பெயர்: Japanese Hare, உயிரியல் பெயர்: Lepus brachyurus) என்பது ஜப்பானை பூர்வீகமாக கொண்ட ஒரு முயல் இனம் ஆகும்.
விளக்கம்
இது சிவந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். இதன் உடல் நீளம் 45 முதல் 54 சென்டி மீட்டரும், எடை 1.3 முதல் 2.5 கிலோகிராமும் இருக்கும். இதன் வால் 2 முதல் 5 சென்டி மீட்டர் நீளம் இருக்கும். இதன் முன்னங்கால்கள் 10 முதல் 15 சென்டி மீட்டர் நீளமும், பின்னங்கால்கள் 12 முதல் 15 சென்டி மீட்டர் நீளமும் இருக்கும். காதுகள் 6 முதல் 8 சென்டி மீட்டர் நீளமும், வால் 2 முதல் 5 சென்டி மீட்டர் நீளமும் இருக்கும். பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் வடக்கு ஜப்பான், மேற்கு கடற்கரை, சடோ தீவு ஆகியவற்றின் பகுதிகளில் ஜப்பானிய முயல் தனது நிறத்தை இலையுதிர் காலத்தில் இழக்கிறது. வசந்த காலம் வரை வெண்மையான நிறத்துடன் காணப்படும். பிறகு சிவந்த பழுப்பு நிறத்திற்கு ரோமம் மாறுகிறது.