கொரிய முயல் (ஆங்கிலப்பெயர்: Korean Hare, உயிரியல் பெயர்: Lepus coreanus) என்பது கொரிய தீபகற்பம் மற்றும் அதை ஒட்டியுள்ள வடகிழக்கு சீனாவில் காணப்படும் ஒரு முயல் இனம் ஆகும். ஒரு வளர்ந்த கொரிய முயல் 2.1–2.6 கிலோகிராம் எடையும், 45–54 சென்டிமீட்டர் உடல் நீளமும் கொண்டிருக்கும். இதன் வாலின் நீளம் பொதுவாக 2–5 சென்டிமீட்டர் இருக்கும். காதுகள் 7.6–8.3 சென்டிமீட்டர் நீளம் இருக்கும். கொரிய முயல் அதன் பரவல் இடங்களில் தொலைதூர மழைக்காடுகள் முதல் பயிரிடப்படும் நிலங்கள் வரை பல்வேறு வகையான வாழ்விடங்களில் வசிக்கிறது. இதன் ரோம நிறம் ஒவ்வொரு முயலுக்கும் வேறுபடுகிறது. ஆனால் பொதுவாக ஈரல் போன்ற பழுப்பு நிறத்திலேயே இருக்கும்.
About the author
Related Posts
September 20, 2021
இலங்கை பறக்கும் பாம்பு
October 6, 2021
நியுசிலாந்து காடை
October 5, 2021