மலேயா நீர் மூஞ்சூறு (Malayan water shrew)(சிமரோகலே ஹந்து), ஹந்து நீர் மூஞ்சூறு என்றும் அழைக்கப்படுகிறது. இது மலேசியா மாநிலமான சிலாங்கூரிலிருந்து மட்டுமே காணப்படுகிறது. இதனுடைய பற்கள் சிவப்பு-நிறமுடையது. இது அச்சுறு நிலையினை அண்மித்த உயிரினம் எனக் கருதப்படுகிறது.
இதனுடைய சிற்றினப் பெயரானது மலாய் வார்த்தையானது ஹந்துவிலிருந்து வந்தது. ஹந்து என்பதற்குப் பேய் என்று பொருள்.
உடற்கூறியல்
மலேய நீர் மூஞ்சூறுவின் அடிப்பகுதி வெள்ளையாகவும், மேற்பகுதி மற்றும் பக்கங்களிலும் கருப்பு நிறத் தோலும் வால் மேற்பரப்பில் ஓரங்களில் தடித்த உரோமங்கள் உள்ளன. இவை நீச்சலும் போது பயன்படுகிறது. பல் நுனி சிவப்பாக உள்ளன. மலேயா நீர் மூஞ்சூறு சுமார் 10 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. நீளம் 20 செ.மீ. வரை இருக்கும்.
வாழ்விடம்
மலேசிய நீர் மூஞ்சூறு தீபகற்ப மலேசியாவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழ்கிறது. இது முக்கியமாக நன்னீர் ஏரிகள் மற்றும் தாவரங்களால் சூழப்பட்ட ஆறுகளில் வாழ்கிறது. இது தனது பெரும்பாலான நேரத்தை தண்ணீருக்கடியில் செலவிடுகிறது. தண்ணீருக்கடியில் இந்த மூஞ்சூறு வேட்டையாடுபவர்களைத் தவிர்ப்பதற்காக இலைகள்/தாவரங்கள் நிறைந்த பகுதிகளில் தங்குகிறது. இதனைப் பயன்படுத்தி தன்னுடைய இரையான மீன், தவளைகள் மற்றும் தாவரங்களை உண்ணுகிறது.
வெளி இணைப்புகள்
மலேயா நீர் மூஞ்சூறு – விக்கிப்பீடியா