மத்திய தரைக்கடல் நீர் மூஞ்சூறு

மத்திய தரைக்கடல், தெற்கு அல்லது மில்லரின் நீர் மூஞ்சூறு (Mediterranean water shrew)(நியோமிசு அனோமலசு) என்பது சொரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டி இனமாகும்.


பரவல்


இந்த மூஞ்சூறு அல்பேனியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், போசுனியா எர்செகோவினா, பல்காரியா, குரோவாசியா, செக் குடியரசு, பிரான்சு, ஜெர்மனி, கிரேக்கம், அங்கேரி, ஈரான், இத்தாலி, லீக்கின்ஸ்டைன், லித்துவேனியா, மொண்டெனேகுரோ, வடக்கு மக்கெதோனியா, போலந்து, போர்த்துக்கல், உருமேனியா, செர்பியா, சிலோவாக்கியா, சுலோவீனியா, எசுப்பானியா, சுவிட்சர்லாந்து, துருக்கி, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது .


உணவுப் பழக்கம்


இது முக்கியமாக நீர் நிலவாழ்வன, சிறிய மீன்கள் முதலியவற்றை உணவாக உட்கொள்கிறது. பூச்சிகள் மற்றும் புழுக்களையும் உண்ணுகின்றன. இதன் உடலமைப்பு காரணமாக உடல் வெப்பத்தை மிக விரைவாக இழப்பதால், ஒவ்வொரு நாளும் இதன் உடல் எடையில் இரண்டு அல்லது மூன்று மடங்கு சாப்பிட வேண்டும்.


வெளி இணைப்புகள்

மத்திய தரைக்கடல் நீர் மூஞ்சூறு – விக்கிப்பீடியா

Mediterranean water shrew – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *