மலை முயல்

மலை முயல் (Lepus timidus), அல்லது நீல முயல் அல்லது தூந்திர முயல் அல்லது வேறுபடும் முயல் அல்லது வெள்ளை முயல் மற்றும் அயர்லாந்து முயல் என்பது ஒரு ஆர்ட்டிக் சார்ந்த முயல் ஆகும். இது துருவ மற்றும் மலைசார்ந்த வாழ்விடங்களுக்கு தகவமைந்துள்ளது.


பரவல்


இந்த இனம் ஃபென்னோஸ்கான்டியா முதல் கிழக்கு சைபீரியா வரை பரவியுள்ளது. மேலும் பிரிக்கப்பட்ட நிலையில் இவை ஆல்ப்ஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பால்டிக் பகுதிகள், வடகிழக்கு போலந்து மற்றும் ஜப்பானின் ஹொக்கைடோ தீவு ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. மலை முயலானது நியூசிலாந்து, ஐஸ்லாந்து, ஷெட்லாந்து, ஒர்க்னே, ஐஸில் ஆஃப் மென், பீக் மாவட்டம், ஸ்வால்பார்ட், கெர்குவேலென் தீவுகள், க்ரோசெட் தீவுகள் மற்றும் ஃபாரோ தீவுகள் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆல்ப்ஸ் மலைகளில் மலை முயலானது பகுதி மற்றும் கால நிலையை பொறுத்து 700 முதல் 3800 மீட்டர் வரை உள்ள உயரங்களில் வாழ்கிறது.


விளக்கம்


ஐரோப்பிய முயலை விட சற்று சிறியதாக இருப்பினும் மலை முயலானது ஒரு பெரிய இனமாகும். இது 45 முதல் 65 சென்டிமீட்டர் நீளம் இருக்கும். இதன் வாலின் நீளம் 4 முதல் 8 சென்டி மீட்டர் நீளம் இருக்கும். இதன் எடை 2 முதல் 5.3 கிலோகிராம் இருக்கும். ஆண் முயல்களை விட பெண் முயல்கள் சற்று எடை அதிகமாக இருக்கும். கோடை காலத்தில் எல்லா மலை முயல்களும் பல்வேறு விதமான பழுப்பு நிற ரோமத்துடன் காணப்படும். குளிர்காலத்திற்கு தயாராவதற்காக இவற்றின் ரோமமானது வெள்ளை (அல்லது பெரும்பாலும் வெள்ளை) நிறத்திற்கு மாறும். வால்கள் வருடம் முழுவதும் வெள்ளையாகவே இருக்கும். ஆனால் ஐரோப்பிய முயல்களின் (Lepus europaeus) வாலின் மேல் பகுதி கருப்பாக இருக்கும். இதன் மூலம் இந்த இரண்டு இனங்களையும் நம்மால் பிரித்தறிய முடியும். மலை முயலின் துணையினமான அயர்லாந்து மலை முயல் (Lepus timidus hibernicus) வருடம் முழுவதும் பழுப்பு நிறமாகவே இருக்கும். அரிதாகவே சில முயல்கள் வெள்ளை நிறத்திற்கு மாறும். அயர்லாந்து முயல்கள் தங்க நிற வேறுபாட்டுடன் காணப்படலாம். முக்கியமாக ரத்லின் தீவில் காணப்படும் அயர்லாந்து முயல்கள் அத்தகைய வேறுபாட்டுடன் காணப்படலாம்.

வெளி இணைப்புகள்

மலை முயல் – விக்கிப்பீடியா

Mountain hare – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.