புனுகுப்பூனை (Civet) ஆசிய ஆபிரிக்க வெப்பவலயக் காடுகளில் காணப்படும் சிறிய உடலமைப்புக் கொண்ட பாலூட்டி விலங்காகும். புனுகுப் பூனை வகையைச் சேர்ந்த பல வகை விலங்குகள் காணப்பட்ட போதிலும் பன்னாட்டு ரீதியில் இப்பதம் பொதுவில் ஆபிரிக்க புனுகுப்பூனை (African civet)யையே குறிப்பாகச் சுட்டும். இதற்குக் காரணம் வரலாற்று ரீதியில் உலகில் புனுகு எனப்படும் வாசணைத் திரவியம் இவ்விலங்கிலிருந்தே தயாரிக்கப்பட்டது. ஆயினும் தமிழரிடையில் புனுகுப்பூனை என்ற சொல் சிறிய இந்தியப் புனுகுப்பூனை (Viverricula indica) யைக் குறிக்கப் பயன்படுகின்றது.
About the author
Related Posts
October 11, 2021
கண்ணாடி ஒயிட்ஸ்டார்ட்
September 20, 2021
மாலி நாகப்பாம்பு
September 23, 2021