யுன்னான் முயல் (ஆங்கிலப்பெயர்: Yunnan Hare, உயிரியல் பெயர்: Lepus comus) என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள மிதமான அளவுள்ள ஒரு பாலூட்டி ஆகும். இது மிருதுவான, தட்டையான மற்றும் நீண்ட முதுகுப்புற ரோமத்தைக் கொண்டுள்ளது. அந்த ரோமம் சாம்பல் பழுப்பு அல்லது அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும். இது வெண்ணிற கீழ் புறத்தை கொண்டுள்ளது. இது சீனாவில் மட்டுமே காணப்படுகிறது என நம்பப்பட்டது. ஆனால் 2000 இல் வடக்கு மியான்மரிலும் இது காணப்பட்டதாக பதியப்பட்டுள்ளது. இது ஒரு தாவர உண்ணி ஆகும். இது புதர்கள் மற்றும் மூலிகை பூச்செடிகளில் உணவு தேடுகிறது.
About the author
Related Posts
October 8, 2021
சிறு நீல மீன்கொத்தி
September 30, 2021
குட்டை இறக்கையன்
July 9, 2021