காட்டெருது (Bison) என்றவகை விலங்கினங்கள் பெரிய, இரட்டைப் படைக் குளம்புகள் உள்ள பொவைன் எனப்படும் உட்குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்.
இவை இரண்டு உயிருள்ள இனங்களாகவும் நான்கு அழிபட்ட இனங்களாகவும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. அழிந்த இனங்களில் மூன்று அமெரிக்காவிலும் ஒன்று மேற்கு ஐரோப்பிய இசுடெப் சூழலிலிலும் காணப்பட்டன.
வாழும் இனங்களில் அமெரிக்கக் காட்டெருது, (Bison bison) அல்லது அமெரிக்க எருமை வட அமெரிக்காவில் மட்டுமே கூடிய அளவில் காணப்படுகிறது. இவற்றில் இரண்டு உட்பிரிவுகளாக, சமவெளி காட்டெருது, (Bison bison bison) மற்றும் வனக் காட்டெருது, (Bison bison athabascae) உள்ளன. ஐரோப்பிய காட்டெருது (Bison bonasus), ஐரோப்பாவிலும் காக்கேசியாவிலும் காணப்படுகிறது.