காகம்

.


காகம் அல்லது காக்கை (உயிரியல் வகைப்பாடு: Corvus) என்பது கார்விடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை இனமான இது பொதுவாக கரிய நிறம் கொண்ட பறவை ஆகும். இலத்தீன் மொழியில் ‘கார்வுச்’ என்ற சொல்லுக்கு ‘பெரிய உடலமைப்பு கொண்டவை’ என்று பொருள். காகங்களில் 40 இனங்கள் உள்ளன. சிறிய புறா அளவிலிருந்து பெரிய ‘ஜாக்டா’ எனப்படும் இனம் வரை இவற்றில் அடங்கும். இது பறவைகளில் கூடுதல் அறிவுத் திறன் பெற்றதாகக் கருதப்படுகிறது. இது மக்கள் வாழும் இடங்களில் கூட்டமாக இருந்து கொண்டு அவர்கள் வெளியிடும் குப்பைகளையும், மற்றைய வீண்பொருட்களையும் உண்டு வாழ்கிறது. இதன் காரணமாக சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பில் ஒரு பங்கு வகிக்கிறது.


இவற்றை மிக இலகுவாகப் பயிற்றுவிக்க முடியும். காகங்களைப் பழக்கி இலகுவாகச் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுத்த முடியும் என்பதால் இவற்றைச் செல்லப்பறவைகளாக வளர்ப்பது சில நாடுகளில் சட்டவிரோதமானதாகும்.


காகங்களில் ஆஸ்திரேலிய, வட அமெரிக்க, ஆபிரிக்க, ஐரோப்பிய, ஆசிய இனங்கள் பல உள்ளன.. கரியன் காகம், வீட்டுக் காகம் ஆகியன ஆசியக் காக இனங்களாகும்.


பண்பாடு


உலகெங்கும் உள்ள மக்களின் பண்பாட்டில் காகத்திற்கு ஓர் இடமுண்டு. காகம் கரைந்தால் வீட்டிற்கு விருந்தாளிகள் வருவர் என்பது தமிழர் நம்பிக்கை ஆகும். மேலும் ஒற்றுமைக்கும் பகிர்ந்து உண்ணலுக்கும் காக்கை எடுத்துக்காட்டாகக் காட்டப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் பூர்வகுடிமக்களின் கருத்துப்படி காக்கைகள் கலாச்சாரத்தின் சின்னமாகவும் மூதாதையரின் அம்சமாகவும் கருதப்படுகிறது. காகங்களைப் பற்றி எழுதப்பட்ட ‘கில்காமேஷ்’ என்ற நூல் உலகின் பழைமையான இலக்கியங்களில் ஒன்றாகக் கருந்தப்படுகிறது. இந்நூல் மெசபடோமிய நாகரிகத்தைப் பற்றிக் கூறும் ஐந்து கவிதைகள் கொண்ட இதிகாசம் ஆகும். திபெத்திய கலாச்சாரத்தில் ‘தருமபாலா’ பூமியில் எடுத்துள்ல அவதாரங்களில் ஒன்றாகக் காகம் கருதப்படுகிறது. ஐரிஷ் புராணங்களின்படி காகங்கள் போர் மற்றும் இறப்பிற்கான ‘மாரிகின்’ என்ற கடவுளாகக் கருதப்படுகிறது.


பழம்பெரும் இந்து மத வேத தத்துவ நூலாகக் கருதப்படும் ‘யோகவசிஷ்டா’ வில் மிக வயதான ஞானி ஒருவர் காகவடிவில் குறிப்பிடப்படுகிறார். இந்துமத நம்பிக்கையின் படி காகங்கள் மூதாதையரின் வடிவமாகக் கருதப்படுகிறது. அதனால் சிறப்பு நாள்களில் அமாவாசை, திதி, தீபாவளி போன்ற நாள்களில் முதலில் காக்கைக்கு உணவு படைக்கப்படுகிறது. பல வீடுகளில் காகத்திற்கு படைப்பது ஓர் அன்றாட நிகழ்வாகவும் உள்ளது.


வாழ்வியல்


18 ஆம் நூற்றாண்டில் உலகப் புகழ்பெற்ற இயற்கை ஆறிவியல் ஆய்வாளரான கரோலஸ் லின்னேயஸ் எழுதிய ‘இயற்கை முறை எனும் நூலில் காகங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். The name is derived from the Latin corvus meaning “raven”. காக்கைகள் எந்தப் பருவ நிலை உள்ள கண்டங்களிலும் வாழும் திறன் பெற்றவை. தென் அமெரிக்கா மற்றும் பெருங்கடல்களுக்கு அப்பால் காணப்படும் சிறு தீவுகளைத் தவிர உலகெங்கும் காக்கைகள் காணப்படுகின்றன. மத்திய ஆசியாவில் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் காகங்கள் வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது. மரங்களில் வாழும் காகங்கள் பொதுவாகக் 20 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடியவை. பெண்காகங்கள் மூன்று வருடங்களிலும் ஆண் காகங்கள் ஐந்து வயதில் பருவத்தை அடைந்து விடுகின்றன. கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். இதுவரை உலகில் அதிக வருடம் உயிர்வாழ்ந்த காகமாகக் கருதப்படுவது அமெரிக்காவின் காடுகளில் வாழ்ந்த காகம் ஆகும். அது 30 வருடம் வரை வாழ்ந்துள்ளது.


நடத்தையியல்


காகங்கள் சேர்ந்திருக்கும் போது ஒரு காகம் மற்றொரு காகத்தின் அலகு, உடல் போன்ற பகுதிகளில் உள்ள கடினமான ஓடு உடைய பேன்களைச் சுத்தம் செய்யும். இச்செயல் ஆண் காகங்களுக்கும், பெண் காகங்களுக்கும் இடையேயான ஒரு ஈர்ப்பு நிகழ்வாகும். அண்மையில் காகங்களைக் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகள் அவை முக வடிவமைப்பைக் கொண்டு ஒரு மனிதனை மற்றொரு மனிதனிடமிருந்து வேறுபடுத்திக் காணக்கூடிய திறன் படைத்தவை என்பதை மெய்ப்பிக்கின்றன. மேலும் கிளிகளைப் போல காகங்களும் மனிதக் குரலில் பேசும் திறன் பெற்றவை என்று சொல்லப்படுகின்றன. இவ்வாறு பேசுவதற்குப் பழக்கப்பட்ட காகங்கள் கிழக்கு ஆசியாவில் நல்வாய்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.


ஆஸ்திரேலியாவில் இருந்து 1500 கி. மீ தொலைவில் மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள நியூகலிடோனியா என்ற தீவில் வாழ்கின்ற காகங்கள் தன் அலகையும் பிற உடல் உறுப்புகளையும் பயன்படுத்தி தன் இரையை மிகத் திறமையாகப் பெறுகின்றன. கடினத்தன்மையுள்ள பற்களை இலையைக் கத்தரிப்பதற்கும் இரையைக் குத்திக் கிழிப்பதற்கும் பயன்படுத்துகிறது. Another skill involves dropping tough nuts into a trafficked street and waiting for a car to crush them open. மேலும் ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்துவில் உள்ள ஒரு வகைக் காக்கை நச்சுத்தன்மையுள்ள தேரைகளைப் பிடித்து அவற்றின் தொண்டையைக் கிழித்து அதன் நஞ்சை நீக்கிவிட்டு மற்ற பகுதிகளை உணவாக உட்கொள்கின்றன.


உணவு


காக்கைகள் பொதுவாக அனைத்துண்ணிகள் ஆகும். தானியங்கள், புழுக்கள், விதைகள், கொட்டைகள், தவளை, நண்டு போன்றவற்றையும் உண்ணும். வயல்களில் உள்ள பூசிகளையும் உணவாகக் கொள்வதால் உழவர்களின் நண்பன் எனப்படுகிறது. இறந்த உடல்களையும் தின்னும்.


அறிவுத்திறன்


அறிஞர்களின் கருத்துப்படி பறவைகளில் அதிக அறிவு த்திறன் பெற்ற பறவை காகம் ஆகும். இவற்றின் அறிவுத்திறனுக்குக் காரணம் அதன் மூளைப்பகுதியில் அமைந்துள்ள ‘நிடோபோடாலியம் ஆகும். ஜாக்டா எனப்படும் அமெரிக்க மற்றும் கன்டாவில் காணப்படும் காக்கை இனம், சிம்பன்சி மற்றும் மனிதனின் மூளைப்பகுதியில் அமைந்துள்ள ‘நியோகார்டெக்ஸ்’ பகுதிக்குக் கிட்டத்தட்ட சமமானதாகவும் சிம்பன்சிகளில் உள்ள நியோகார்டெக்ஸ்’ பகுதியை விட பெரிய அளவிலும் நிடோபோடாலியத்தைப் பெற்றிருப்பதே ஆகும். நிடோபோடாலியம் என்பது பறவைகளின் அறிவுத்திறனுக்குக் காரணமாக உள்ள மூளையின் செயல்பாட்டுப் பகுதியாகும்.


ஆய்வுகள்


ஜொஷா கிளெயின் என்ற அறிவியல் அறிஞர் காகங்களை நாம் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் பழக்கப்படுத்தலாம் என ஆய்வு மேற்கொண்டார். அதில் காகங்களைத் தானியங்கி இயந்திரங்களின் துணைகொண்டு தெருக்களில் குவிந்துள்ள குப்பைகளைப் பொறுக்க வைக்கலாம் என்பதே அதுவாகும். இயந்திரத்தில் குப்பையைப் பொறுக்கிப் போட்டவுடன் அவைகளுக்கு விருப்பமான உணவு வகைகள் இயந்திரத்திலிருந்து வருமாறு செய்யலாம்.


அழிவாய்ப்பு இனங்கள்


அமெரிக்க மீன் மற்றும் வன உயிரினங்கள் சேவை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி “ஹவாயன் காகம்’(Hawaiian Crow) மரியனா காகம்’(Mariana Crow) ஆகிய இனங்கள் உலகில் அழிந்துவிட்ட உயிரினங்களின் வகைகளாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஹவாய்த் தீவுகளில் வாழ்ந்துவந்த ஹவாயன் காகம் கி.பி. 2002 வரை அங்கு காணப்பட்டன. ஆபத்தான நிலையில் உள்ளதாக அமெரிக்கக்காகம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டுக் கணக்கின்படி இந்த இனத்தில் 45 விழுக்காடு காகங்கள் ‘வெடிசனல் வைரஸ் என்னும் ஒருவகை நுண்ணுயிர் நோயினால் பாதிக்கப்பட்டு அழிந்துவிட்டன.

விசேட நாட்களில் காகத்திற்கு உணவு வைக்கும் வழக்கம் தமிழர்களிடையே காணப்படுகிறது


வெளி இணைப்புகள்

காகம் பேரினம் – விக்கிப்பீடியா

Corvus – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.