கியூபா காகம் (Cuban crow) என்பது கரிபியத் தீவுகளில் காணப்படும் காகமாகும். இது இத்தீவுகளில் காணப்படும் நான்கு காக்கைச் சிற்றினங்களுள் ஒன்றாகும்.
விளக்கம்
கியூபா காகம் (கோர்வசு நாசிகசு) கரிபியத் தீவுகளில் காணப்படும் நான்கு காக்கைச் சிற்றினங்களுள் ஒன்றாகும். இது வெள்ளை கழுத்து காகம் (கொ. லுகோக்னாபலசு) மற்றும் ஜமைக்கா காகம் (கோ. ஜமைக்காசென்சிசு) ஆகியவற்றுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. இவற்றுடன் ஒரு சில பண்புகளைப் பகிர்ந்து கொள்கிறது. நான்காவது கரீபியன் காகம், பனைக் காகம் (கோ. பால்மரம்), பிற்கால பரிணாம வளர்ச்சியில் தோன்றி வட அமெரிக்க மீன் காகம் (கோ. ஆசிப்ராகசு) குணாதிசயங்களைக் கொண்டது.
உயிரியல்
இது நடுத்தர அளவிலான ( 40–42 சென்டிமீட்டர்கள் or 16–17 அங்குலங்கள் நீளம்). இது காடுகளில் காணப்படும் காகம் ஆகும். இந்த சமூக பறவைகியூபாவின் பெரிய தீவின் பெரும்பகுதியிலும், அருகிலுள்ள இஸ்லா டி லா ஜுவென்டுட் மற்றும் வனப்பகுதி பகுதிகளில் காணப்படுகிறது. இந்த வனப்பகுதி விவசாய நிலமாக மாற்றப்பட்டது. இது பண்ணைகள் மற்றும் கிராமங்களைச் சுற்றி அடிக்கடி காணப்படும். இங்கு மனிதனுடன் ஒப்பீட்டளவில் நெருங்கிய தொடர்பில் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்புடையது.
இந்த காகத்தின் அலகு நீளமானது, பெரிய தலையிலிருந்து நுனியை நோக்கி மென்மையாக வளைந்துள்ளது. நாசி முடிகள் முன்னோக்கியும் மேல் நோக்கியும் நாசி தெரியுமாறு உள்ளன. ஆனால் பிற கோவர்சு இனங்களில் நாசியினை நாசிமுடி மறைத்துள்ளன. பழுப்பு-சிவப்பு கண்ணுக்குப் பின்னாலும் கீழ்த்தாடையிலும் அடர் சாம்பல் திரள் காணப்படும். நல்ல வெளிச்சத்தில் கருப்பு சிறகமைவு, நீல-ஊதா பளபளப்பைக் கொண்டுள்ளன. அல்கு, கால்கள் மற்றும் பாதம் கருப்பு நிறமுடையன. கியூபா காகம் தமது கூட்டினை உயரமான மரங்களில் கட்டுகிறது. இதனுடைய இனப்பெருக்கம் பற்றிய கூடுதல் தகவல்கள் இன்னும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உணவு
இதன் உணவு பழம் மற்றும் பூச்சிகள் ஆகும். இது மனித உணவைச் சாப்பிடாது எனினும், குப்பையினைக் கிளரும்போது, அங்குள்ள கழுவு உணவினை உண்ணுகின்றன. உணவு உண்ணும் பொழுது அதிக ஒலி எழுப்புவதைக் காணலாம். தானியங்கள் மற்றும் பிற விதைகள் கொட்டப்பட்ட வயலின் மேற்பரப்பில் பாதுகாப்பற்ற நிலையில் இதனை நாம் அவதானிக்கலாம்.
குரல்
இதனுடைய குரல் மிகவும் குறிப்பிடத்தக்கது. விசித்திரமான திரவ குமிழ் ஒலி போன்றது. பல்வேறு சேர்க்கைகளில் ஒலி உருவாக்கப்படும் அதிகமாக ஒலிக்கும் ஒலி, காகம் போன்றது. இது மென்மையாக “ஆஆஆஆ” ஐ என ஒலியினை உருவாக்குகிறது.