மீன் காகம்

மீன் காகம் (Fish crow)(கோர்வசு ஆசிப்ராங்கசு) கிழக்கு மற்றும் தென்கிழக்கு அமெரிக்காவின் ஈரநில வாழ்விடங்களில் வாழும் காகமாகும்.


வகைப்பாட்டியல்


மீன் காகத்தை முதலில் அலெக்சாண்டர் வில்சன் 1812இல் விவரித்தார். சமீபத்திய மரபணு சோதனையின் மூலம் இந்த இனம் சினாலாவா காகம் (கோ. சினலோயே) மற்றும் டமுலிபஸ் காகம் (கோ. இம்பார்டசு) நெருங்கிய தொடர்பும், அமெரிக்க காகமான கோ. பிராக்கிரைங்கோசுடன் தொடர்பின்றியும் காணப்படுகிறது.


விளக்கம்


மீன் காகம் மேலோட்டமாக அமெரிக்க காகத்தை ஒத்திருக்கிறது, ஆனால் சிறியது (36 – 41 செ.மீ நீளம்). பட்டுப்போன்ற, மென்மையான இறகுகளைக் கொண்டுள்ளது. மேற்புறங்களில் நீல அல்லது நீல-பச்சை நிறத்தில் மின்னக்கூடியது. அதே சமயம் அடிப்பகுதியில் கறுப்பு நிறத்திலிருந்து அதிக பச்சை நிறம் கொண்டதாக இருக்கும். கண்கள் அடர் பழுப்பு நிறமுடையன. அலகு பொதுவாக அமெரிக்க காகத்தை விடச் சற்றே மெலிதானது. ஆனால் இரு இனங்களையும் ஒன்றாகப் பார்த்தால் மட்டுமே வேறுபாடு தெரியும்.


அமெரிக்க காகத்திலிருந்து மீன் காகத்தினை காட்சி வேறுபாடு காண்பது மிகவும் கடினம்; பெரும்பாலும் தவறானது. ஆயினும், அளவு தவிர வேறுபாடுகள் உள்ளன. மீன் காகம் அதிக மெலிந்த அலகினையும் கால்களையும் கொண்டிருக்கும். மேல் அலகின் நுனி சிறிய கூர்மையான கொக்கி போல இருக்கலாம். மீன் காகம் நடக்கும்போது குறுகிய கால்கள் கொண்டிருப்பது போலத் தோன்றும். ஒலி எழுப்பும் போது, மீன் காகங்கள் தொண்டை இறகுகளைத் துடைக்கின்றன.


இந்த இனத்திற்கும் பிற அமெரிக்க காக்கை இனங்களுக்கும் குரல் மிகவும் வேறுபடுகிறது. மீன் காகத்தின் குரல் “ஆர்க், ஆர்க், ஆர்க்” அல்லது “வாவ்-வாவ்” என்று விவரிக்கப்பட்டுள்ளது. பறவையிலார் இவற்றை வேறுபடுத்தி அறிவர். “அமெரிக்க காகத்தின் மிகவும் பொதுவான அழைப்பு ஒரு தனித்துவமான” காவ் காவ் “என்பதையும், மீன் காகத்தின் நாசி “நியு உன்” என்பதாகும்.


பரவலும் வாழ்விடமும்


மீன் காகம், அமெரிக்காவின் கிழக்கு கடற்பரப்பில் றோட் தீவு முதல் கீ வெஸ்ட் வரையிலும், மேற்கில் மெக்சிகோ வளைகுடாவின் வடக்கு கடற்கரையோரத்திலும் காணப்படுகிறது. உள்நாட்டு ஆற்றுப் பகுதிகளிலும் காணப்படுகிறது. கடலோர சதுப்புநிலங்கள் மற்றும் கடற்கரைகள், ஆறுகள், உள்நாட்டு ஏரிகள் மற்றும் சதுப்புநிலங்கள், ஆற்றங்கரைகள் மற்றும் இத்தகையப் பகுதிகளுக்கு அருகே உள்ள நிலங்களில் இவை அடிக்கடி காணப்படும்.


நடத்தை


உணவு


உணவினை நிலத்திலிருந்தோ அல்லது ஆழமற்ற நீரிலிருந்தோ பெறுகின்றது. இங்கு இவை வட்டமிட்டு உணவுப் பொருட்களை தன் கால்களால் தண்ணீரிலிருந்து பறிக்கும் தன்மையுடையன. இவை அனைத்துண்ணி வகையின. இது நண்டுகள் மற்றும் இறால்கள் உள்ளிட்ட சிறிய முதுகெலும்பிலிகளையும், தனிமைப்படுத்தப்பட்ட மீன்கள் மற்றும் உயிருடன் உள்ள மீன்கள், பறவைகள் முட்டை மற்றும் கூட்டிலுள்ள பறவைகள், சிறிய ஊர்வன, பல வகையான பழங்கள், வேர்க்கடலை மற்றும் தானியங்கள் முதலியன உணவாக உள்ளது.


இனப்பெருக்கம்


தனது கூடுகளை பொதுவாக மரத்தில் உயரமான பகுதியில் கட்டுகின்றன. பெரும்பாலும் அருகிலுள்ள மரங்களில் இதே இனத்தின் பிற காகங்களுடன் கூடு அமைத்து கூட்டங்களாக வாழ்கின்றன. நான்கு அல்லது ஐந்து முட்டைகள் வரை இடுகின்றன. இவை வெளிர் நீலம்-பச்சை நிறத்தில், இவை ஆலிவ்-பழுப்பு நிறத்தில் காணப்படும்.


பாதுகாப்பு


இந்த இனம் அமெரிக்க காகத்தை விட மேற்கு நைல் வைரசுக்கு சற்றே எதிர்ப்புத் தன்மை கொண்டது. மீன் காகங்களுக்கு உயிர்வாழும் விகிதம் 45% வரை பதிவாகியுள்ளது. இது அமெரிக்க காகங்களுக்குப் பூஜ்ஜியத்திற்கு அருகில் உள்ளது.


வெளி இணைப்புகள்

மீன் காகம் – விக்கிப்பீடியா

Fish crow – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *