கட்டனின் குழாய்-மூக்கு மட்டை (Hutton’s tube-nosed bat)(முரினா கட்டோனி) என்பது வெஸ்பெர்டிலியோனிடே குடும்பத்தில் உள்ள வெஸ்பர் வெளவால் சிற்றினமாகும். இது பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், பாக்கித்தான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 1450 மீ முதல் 2500 மீ உயரத்தில் வாழ்கிறது. தென்கிழக்கு ஆசியாவில், வெளவால் அசாதாரணமானது என்று கருதப்படுகிறது. வாழை மரங்களின் இலைகளுக்கு இடையிலும், காடுகளிலும் வசிப்பதாக அறியப்படுகிறது. விறகு மற்றும் மரத்தளவாடத் தேவைக்காக காடழிப்பு, காடுகளை விவசாய நிலங்களாக மாற்றுவதால் இதன் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றன.
About the author
Related Posts
September 20, 2021
ராட்வைலர்
October 11, 2021
குங்குமப் பூச்சிட்டு
October 5, 2021