ஜமைக்கா காகம்

ஜமைக்கா காகம் (Jamaican crow)(கோர்வசு ஜமைசென்சிசு) ஒப்பீட்டளவில் சிறிய கோர்விட் காகம். இதன் நீளம் 35 முதல் 38 செ.மீ. ஆகும். இது உருவப் பண்புகள் அடிப்படையில் லா எசுப்பானியோலாவின் மேற்கிந்திய இனங்களான, கியூபா காகம் (கோர்வசு நாசிகசு) மற்றும் வெள்ளை கழுத்து காகம் (கோர்வசு லூகோஞாபலசு) மிகவும் நெருக்கமானது.


பரவலும் வாழ்விடமும்


இதன் பெயர் குறிப்பிடுவதுபோல், இந்த இனம் ஜமேக்கா தீவில் காணப்படுகிறது. இங்கு அழிக்கப்பட்ட பகுதி கலந்த வனப்பகுதிகளில் வாழ்கிறது. மேலும் பெரிய தோட்டங்களில் அடிக்கடி காணப்படுகிறது. மலை மற்றும் மலை வனப்பகுதிகளைச் சார்ந்த பறவை இது என்றாலும், வறண்ட காலங்களில் உயரம் குறைவான சமவெளிப் பகுதிகளிலும் இதனைக் காணலாம்.


விளக்கம்


இதன் உடலானது புகைபோன்ற-சாம்பல் நிறமானது. இதன் உறவினர்களைப் போலப் பளபளப்பாக இல்லை. கண்ணுக்குப் பின்னால் சிறகுகள் இல்லாத தோல் அடர் சாம்பல் நிறத்தில் காணப்படும். இதன் அலகு சாம்பல் நிறத்தில் கூர்மையானது.நாசி முடிகள் காரணமாக நாசி தெரிவதில்லை. கருவிழி சாம்பல்-பழுப்பு அல்லது சிவப்பு-பழுப்பு நிறமாக இருக்கும். இந்நிறத் தோற்றம் வயதைப் பொறுத்தது. கால்கள் மற்றும் பாதம் கருப்பு நிறமானது.


உணவு


காட்டில் வாழும் இந்தக் காகம் தனியாகவோ, துணையோடோ இரை தேடுகின்றன. இதனுடைய இறையின் பெரும்பகுதி பழங்களாகும். இது சிறிய முதுகெலும்பிலி மற்றும் பல்லி முதலியவற்றோடு, பறவைகளில் கூடுகளில் உள்ள முட்டை மற்றும் குஞ்சுகளை வேட்டையாடுகிறது.


இனப்பெருக்கம்


பொதுவாக உயரமான மரங்களில் கூடுகட்டுகின்றன. மரப் பொந்துகளையும் கூடுகளாகப் பயன்படுத்துகின்றன.


ஒலி


இதனுடைய ஒலியானது இதனுடன் தொடர்புடைய இனங்களின் குரல் போன்றது. மிகவும் தனித்துவமானது மற்றும் பல்வேறு ஜப்பரிங் மற்றும் குமிழ் ஒலிகளைக் கொண்டுள்ளது (இதனால் இதனுடைய ஓசை ஜமைக்கா பாட்டோயிஸ் எனப்படுகிறது.). ஆனால் இது மிகவும் நிதானமாக “க்ரா-ஆ” என மாறுபாடுகளுடன் ஒலிக்கின்றது.


வெளி இணைப்புகள்

ஜமைக்கா காகம் – விக்கிப்பீடியா

Jamaican crow – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *