அண்டங்காக்கை (pronunciation (உதவி·தகவல்)) (jungle crow) என்பது ஒருவகைக் காக்கையாகும். இப்பறவை ஆசியக்கண்டத்தில் பரவலாகக் காணப்படுகிறது.
விளக்கம்
இக்காக்கை ஒளிரும் கரியநிறம் கொண்டது. கனத்த அலகும் பலமாக கரகரத்த ‘கா’ என்ற சத்தமும் உடையது. இது பொதுவாக ஊருக்கு வெளியே உள்ள காடுகள் சோலைகள் போன்ற இடங்களில் வாழக்கூடியது. ஊருக்கு வெளியே கொட்டப்படும் குப்பைகளில் உள்ள அழுகிய பொருட்கள் போன்றவற்றை உண்ணும்.