முடைவளிமா (Skunk) என்பது தம்முடைய பாதுகாப்பிற்காக தனது வாலின் அடிப்பகுதியில் இருந்து முடைநாற்றமான ஒருவித திரவத்தைப் பீய்ச்சும் பாலூட்டி வகையாகும். இவை கறுப்பு-வெள்ளை நிறம் கலந்ததாகவும், சிலவேளைகளில் மண்ணிறமும் கலந்ததாகக் காணப்படுகின்றது. இவற்றின் வால் பஞ்சு போல் மிகவும் அடர்த்தியானதாகும். இவற்றை சிலர் செல்லப்பிராணிகளாகவும் வளர்க்கின்றனர். இவற்றில் மொத்தம் 11 இனங்கள் உள்ளன. இவை வட மற்றும் மத்திய அமெரிக்காவில் பரந்து காணப்படுகின்றன.
இவை தாவரம், விலங்கு என இரண்டையும் உண்ணும் அனைத்துண்ணிகள் ஆகும். விலங்குகளில் சிறிய விலங்குகளான மண்புழுக்கள், தவளைகள், பாம்புகள், பறவைகள் மற்றும் அவற்றின் முட்டைகள் என பலவற்றையும் உண்கின்றன.