முதல் நிலை பாலூட்டிகள் அல்லது மோனோட்ரீம்கள் (Monotreme) என்று அழைக்கப்படுபவை பாலூட்டிகளின் துவக்க நிலைப் பண்புகள் கொண்டுள்ள விலங்குகளாகும். இவை நீரிலும், நிலத்திலிலும் புகுந்து வாழக்கூடிய இரவாடிகள் ஆகும். மோனோட்ரீம்களில் எஞ்சியிருக்கும் உயிரினங்கள் அனைத்தும் ஆஸ்திரேலியா, நியூ கினியாவை பூர்வீகமாக கொண்டவையாக உள்ளன, இருப்பினும் இவற்றில் சில தென் அமெரிக்காவில் பரவலாக இருந்து அழிந்துபோயின என்பதற்கான சான்றுகள் உள்ளன. தற்போதுள்ள மோனோட்ரீம் இனங்களில் எஞ்சியுள்ளவை வாத்தலகி மற்றும் நான்கு வகையான எச்சிட்னாக்கள் ஆகும். மோனோட்ரீகளை வகைபிரித்தல் தொடர்பாக தற்போது சில விவாதங்கள் நடந்துவருகின்றன.
விளக்கம்
இந்த விலங்குகளின் தோல் உரோமத்தால் போர்த்தப்பட்டது. புறக் காது மடல்கள் காணப்படுவதில்லை. ஆண் விலங்குகளின் பின் கால்களில் உரோமக் குழல்கள் உள்நோக்கியவாறு காணப்படுகின்றன. பால் முனைக் காம்பற்ற பால் சுரப்பிகள் உள்ளன. வளர்ச்சி அடைந்த உயிரிகளுக்கு பற்கள் காணப்படுவதில்லை. உணவுப் பாதை வாய்க் குழியில் துவங்கி பொதுக் கழிவாயில் முடிவடைகிறது. இவை நுரையீரல்கள் காெண்டு சுவாசிக்கின்றன. கார்பஸ் கலோசம் அற்ற இதன் மூளை எளிய அமைப்பு கொண்டது.
இவற்றின் கழிவு நீக்க மண்டலமாக மெட்டாநெப்ரிக் சிறுநீரகங்கள் உள்ளன. சிறுநீர் நாளங்கள் சிறுநீரக இனப்பெருக்க புழையில் திறக்கின்றன. இவற்றின் இதயம் நான்கு அறைகள் கொண்டது. இதய நாண்கள் கிடையாது.
இவற்றின் இனப்பெருக்க மண்டலமானது முதிராப் பண்பினைக் காட்டுவதாக உள்ளன. இதன் விந்துச் சுரப்பி வயிற்றுக் குழியிலேயே உள்ளது. வலது சினையகம் குன்றியுள்ளது. பெண் உயிரிகள் முட்டையிடக் கூடியன. அகக் கருவுருதல் காணப்படுகிறது.
சிறப்புப் பண்புகள்
வெளி இணைப்புகள்
மோனோட்ரீம்கள் – விக்கிப்பீடியா