பனைக் காகம்

பனைக் காகம் (Palm crow)(கோர்வசு பால்மரம் ) என்பது கரிபியன் தீவான லா எசுப்பானியோலா (எயிட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு) பகுதிகளில் காணப்படும் சிறிய அளவிலான கோர்விட் குடும்ப காகமாகும். முன்னர் கியூபாவில் அதிகமாகக் காணப்பட்ட இதன் எண்ணிக்கை தற்பொழுது பெருமளவில் குறைந்துள்ளது.


வகைப்பாட்டியல்


கியூபன் துணையினங்கள் சற்று சிறியவை, பொதுவாக இவை ஓர் துணையினமாகப் பிரிக்கப்படுகின்றன (கோர்வசு பால்மரம் மினுடசு); ஹிஸ்பானியோலன் துணையினத்தின் முப்பெயர் கோர்வசு பால்மரம் பால்மரம் (பரிந்துரைக்கப்பட்ட துணையினங்கள்) ஆகும். இந்த இரு கிளையினங்களும் பொதுவாக ஹிஸ்பானியோலன் பனை காகம் மற்றும் கியூபா பனை காகம் எனப் பொதுவான பெயர்கள் மூலம் வேறுபடுத்தப்படுகின்றன. இருந்த போதிலும் ஹிஸ்பானியோலா வெள்ளை கழுத்து காகம் கோர்வசு லூகோஞாபலசுசுடன் சமந்தைய இனமாகத் தோன்றுகிறது. மேலும் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மீன் காகம் உள்ளிட்ட இரண்டு சிறிய இனங்களான, டாமுலிபஸ் காகம் (கோ. இம்பார்டசு) மற்றும் மெக்சிக்கோவின் சினோலோன் காகம் (கோ. சினலோயே) தொடர்புடையது. இவை கியூபா காகம் (கோர்வசு நாசிகசு) மற்றும் ஜமேக்கா காகம் (கோர்வசு ஜமைசென்சிசு), ஆகிய கரீபியன் காகங்களுடன் தொடர்புடையன.


வாழ்விடம்


பனைக் காகத்தின் உள்ளூர் பெயராக டொமினிக்கன் குடியரசில் கா என்பதாகும். இங்கு இது பைன் மலைக் காடுகள் மற்றும் என்ரிகுயிலோ ஏரியினைச் சுற்றிக் காணப்படுகிறது.


வெளி இணைப்புகள்

பனைக் காகம் – விக்கிப்பீடியா

Palm crow – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.