மெலிந்த அலகு காகம் (Slender-billed crow)(கோர்வசு என்கா) என்பது பேசரின் வரிசையில் கோர்விடே, குடும்பத்தினைச் சார்ந்த கோர்வசு பேரினத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். செங்கரு நீல காகத்துடன் மரபணு ரீதியாக வேறுபட்டது. செங்கரு நீல காகம் கோர்வசு வயலசியசு எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பீன்சில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடமாக மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடு மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்பு நிலக் காடுகளாகும்.
வெளி இணைப்புகள்
மெலிந்த அலகு காகம் – விக்கிப்பீடியா