தும்பிப்பன்றி

தும்பிக்கை பன்றி அல்லது தும்பிப்பன்றி (tapir) தாவர உண்ணியான இப்பாலூட்டிகள் பன்றியைப் போன்று குட்டையாகவும், நீண்டும் காணப்படும். இதன் மூக்குப் பகுதி நீண்டும், எதையும் எளிதில் பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த தும்பிக்கைப் போன்று காணப்படும்.


தும்பிப்பன்றிகள் தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் அடர்ந்த காடுகளில் காடுகளில் காணப்படுகிறது. தும்பிக்கைப் பன்றி இனங்களில் பிரேசில் தும்பிப்பன்றி, மலாய் தும்பிப்பன்றி, மெக்சிகோ தும்பிப்பன்றி, அமேசான் தும்பிப்பன்றி, கபோமணி தும்பிப்பன்றி மலைத்தும்பிப்பன்றி என ஐந்து வகைகள் உண்டு.


தும்பிப்பன்றிகள் அருகிய அல்லது அழியும் வாய்ப்பில் உள்ள விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.


தும்பிப்பன்றிகள் குதிரை, குரங்கு, வரிக்குதிரை, மூக்குக் கொம்பன் போன்ற விலங்குகுகளுடன் சேர்ந்து உணவு தேடும்.


உடல் அமைப்பு


தும்பிப்பன்றிகளின் சராசரி உடல் நீளம் அதிக பட்சமாக 6.6 அடியாகவும் (2 மீட்டர்), உயரம் 3 அடியாகவும் (1 மீ), எடை 150 முதல் 300 கிலோ கொண்டதாக உள்ளது. இவைகள் வென்னிறம், கருநிறம் வெளிர் நிறம், செம்மண்ணிறம், சாம்பல் நிறங்களில் காணப்படுகிறது. பெண் தும்பிப்பன்றிகளுக்கு ஒரு ஜோடி முலைக்காம்புகள் மட்டும் உள்ளது. ஆண் தும்பிப்பன்றிகளின் உடல் நீளத்தைப் பொறுத்து ஆண் குறிகளின் நீளம் அமைந்துள்ளது.


மலாய் தும்பிப்பன்றிகளின் முன்னங்கால்களில் நான்கு குளம்பிகளும்; பின்னங்கால்களில் மூன்று குளம்பிகளும் கொண்டுள்ளது.


தும்பிப்பன்றிகள் 42 முதல் 44 பற்கள் வரை கொண்டது.


ஆண் தும்பிப்பன்றிகள் பிறந்த மூன்று முதல் ஐந்தாண்டுகளில் இனச்சேர்க்கைக்கு தயாராகிவிடும். பெண் தும்பிப்பன்றிகள், ஆண் பன்றிகளை விட வெகு விரைவில் இனச்சேர்க்கைக்கு முன்னிற்கும். பெண் தும்பிப்பன்றிகள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு குட்டி ஈனும். பிறந்த குட்டி பதின்மூன்று மாதங்கள் தாயிடம் வளர்ந்த பின்னர் தனியாகச் சென்று உணவு தேடும். தும்பிப் பன்றிகள் காட்டிலும், உயரியல் பூங்காக்களிலும் 25 முதல் 30 ஆண்டுகள் வாழத்தக்கது.

வெளி இணைப்புகள்

தும்பிப்பன்றி – விக்கிப்பீடியா

Tapir – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.