நீர்ச் சருகுமான்

நீர்ச் சருகுமான் (ஹைமோசுகசு அக்வாடிகசு), என்பது கோரைப்பல் மான் என்றும் அழைக்கப்படுகிறது. இது வெப்பமண்டல ஆப்பிரிக்காவில் காணப்படும் அசைபோடும் சிறிய தாவர உண்ணியாகும். இதுவரை அறியப்பட்ட 10 வகையான சருகு மான்களில் மிகப் பெரியது நீர்ச் சருகுமானாகும். இது மான்களைப் போன்றும் ஆனால் அளவில் சிறியவை, இரட்டை குளம்ப்பிகள் போன்று சம-கால்விரல்களைக் கொண்டுள்ளன.


விளக்கம்


நீர்ச் சருகுமான்களில் பெண்கள் ஆண்களைவிட பெரியவை. பொதுவாக ஆண்களைவிடப் பெண்கள் சுமார் 2 கிலோ எடை அதிகமாகக் காணப்படும். உடல் நீளம் சுமார் 85 ஆகும் செ.மீ, மற்றும் தோள்பட்டை உயரம் 35 ஆகும் செ.மீ. நீர்ச் சருகு மானின் மேற்பகுதியில் நேர்த்தியான, சிவப்பு-பழுப்பு நிற தோல் காணப்படும். அடிப்பகுதி வெண்மையானது. உடலில் தோள்பட்டை முதல் வால் வரை கிடைமட்டமாக வெள்ளை கோடு காணப்படும். பின்புறத்தில் வெள்ளை கோடுகளில் செங்குத்து வரிசைகள் உள்ளன. கன்னம், தொண்டை மற்றும் மார்பு கரடுமுரடான வடிவத்துடன் வெண்மையான மயிர் காணப்படும். நீர்ச் சருகுமானின் பின்புறம் சக்திவாய்ந்த தசைகள் காணப்படும். இவை தோள் பகுதியினை விட அதிகமாக உள்ளன. நடக்கும் போது தலை தரையை நோக்கி இருக்கும். இதனால் சருகுமான் எளிதில் புதர் வழியே செல்கின்றது. தடிமனான, வலுவூட்டப்பட்ட தோலின் ஒரு அடுக்கு முதுகெலும்பு மேற்பரப்பில் உள்ளது. இது காயங்களிலிருந்து பின்புறத்தைப் பாதுகாக்கிறது. பருமனான உடலுடன் ஒப்பிடும்போது கால்கள் குறுகியதாகவும் மெல்லியதாகவும் உள்ளன. வால் குறுகியது பருத்தி பந்து போன்றது.


விநியோகம் மற்றும் வாழ்விடம்


நீர்ச் சருகுமான் ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல பகுதிகளில் காணப்படுகிறது. கடலோரப் பகுதிகளில் சியேரா லியோனி முதல் மேற்கு உகாண்டா வரை காணப்படுகின்றன. இவை மூடிய-விதானம், ஈரமான, வெப்பமண்டல தாழ் நில காடுகளில் காணப்படுகின்றன. இந்த வாழ்விடத்திற்குள், இவை நீரோடைகள் அல்லது ஆறுகளுக்கு நெருக்கமான பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன. நீரிலிருந்து 250 மீட்டருக்கு மேல் தொலைவிலிருந்தால் இப்பகுதி மிகவும் அரிதாகவே வாழ்கிறது. பகலில், அடர்ந்த காடுகளுக்கு வெளியே நீர்ச் சருகுமான்களைக் காண இயலாது. ஆனால் இரவில், திறந்த வெளிகள், ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன.


நடத்தை


நீர்ச் சருகுமான் இரவாடுதல் வகையினைச் சார்ந்தவையாகும். இரவில் உணவுக்கான பயணிக்கின்றன. அத்திப்பழம், பனை கொட்டைகள் மற்றும் பிரட்ஃப்ரூட் போன்ற பழங்களை உண்ணுகின்றன. இருப்பினும் இது பூச்சிகள், நண்டுகள் மற்றும் துண்டிக்கப்பட்ட இறைச்சி மற்றும் மீன்களையும் உண்பதாக அறியப்படுகிறது. உணவைக் கண்டுபிடிக்க வாசனை உணர்வை இது பயன்படுத்துகின்றது. பகல் நேரத்தில், ஆப்பிரிக்கப் புதர்களில் அடர்த்தியான பகுதிகளில் நீர்ச் சருகுமான் ஓய்வெடுக்கும். இவை தனித்தனி உயிரினமாக இருப்பதால், இவற்றிற்கு இடையேயான தொடர்பு, முரண்பாடான நேரங்களிலும் மற்றும் இனப்பெருக்க சந்திப்புகளின் போது மட்டுமே நிகழ்கின்றன. ஆண் மான்கள் மற்ற ஆண்களுடன் சண்டையிடுகின்றன. குறுகிய காலச் சண்டையே பெரும்பாலும் நிகழ்கின்றன. சண்டையின் போது வாய் திறந்தே காணப்படும் ஒன்றையொன்று குத்திக்கொண்டு கடிக்கின்றன. நீர்ச் சருகுமான் பலவிதமான சத்தங்களை ஒலிகளை எழுப்புகிறது. இதில் காயம் ஏற்படும் போது ஒரு அலறல் மற்றும் எச்சரிக்கை அலறல் அடங்கும். பெண் மான்கள் சண்டையிடும்போது, அதிக ஓசை எழுப்புகின்றன. ஒரு பெண்ணைப் பின்தொடரும்போது, ஆண் வாய் நிலையில் சத்தம் எழுப்பும்.


பாதுகாப்பு நிலை


நீர்ச் சருகுமானின் மொத்த மக்கள் தொகை சுமார் 278,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க செம்பட்டியலில் நீர்ச் சருகுமானான தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக அறியப்படுகிறது. ஆனால் சமீபத்திய சான்றுகள் சில பகுதிகளில் இதன் எண்ணிக்கை குறைந்து வருவதைக் காட்டுகிறது.


வெளி இணைப்புகள்

நீர்ச் சருகுமான் – விக்கிப்பீடியா

Water chevrotain – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.