கவரிமா

கவரிமா என்று ஊகிக்கப்படும் யாக் (Yak) என்பது நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்ட இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு மாட்டினம். காட்டு யாக்குகள் மாட்டினத்திலேயே பெரிய விலங்குகளுள் ஒன்று. நன்கு வளர்ந்த யாக்குகள் 1.6 முதல் 2.2 மீட்டர் உயரமும் (தோள் வரை) 325 முதல் 1000 கிலோ எடையும் இருக்கும். பசுவின் எடை காளையின் எடையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியே இருக்கும்.


யாக்குகள் அவற்றின் பால், இறைச்சி, உரோமம் ஆகியவற்றுக்காகவும் சுமைகளை எடுத்துச்செல்லவும் வளர்க்கப்படுகின்றன. மேலும் க யாக்கின் காய்ந்த சாணமானது திபெத்திய பீடபூமியில் ஒரு முக்கியமான எரிபொருளாகும். ஏனெனில் அப்பகுதியில் மரங்கள் எதுவும் இல்லாததால் இது ஒன்றே அங்கு எளிதாகக் கிடைக்கும் எரிபொருளாகும்.


யாக்கின் பாலில் இருந்து பெறப்படும் வெண்ணெய் தேநீர் செய்யவும், விளக்கெரிக்கவும், வெண்ணெய்ச் சிற்பங்கள் செய்யவும் பயன்படுகிறது.


வெளி இணைப்புகள்

கவரிமா – விக்கிப்பீடியா

Wild yak – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.