அமுர் வல்லூறு (ஆங்கிலப் பெயர்: Amur falcon, உயிரியல் பெயர்: Falco amurensis) என்பது வல்லூறு குடும்பத்தைச் சேர்ந்த சிறிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது தென்கிழக்குச் சைபீரியா மற்றும் வடக்கு சீனாவில் பெருகுகின்றன. பின்னர் பெரும் மந்தைகளாக இந்தியா மற்றும் அரேபியக் கடலைத் தாண்டி தெற்கு ஆப்பிரிக்காவில் குளிர்காலத்தைக் கழிக்கின்றன. இது இதற்கு முன்னர் சிவப்புப் பாத வல்லூறின் (Falco vespertinus) ஒரு துணையினமாகக் கருதப்பட்டது. கிழக்கு சிவப்புப் பாத வல்லூறு என அழைக்கப்பட்டது. ஆண் அடர் சாம்பல் நிறத்திலும், தொடைகள் மற்றும் அடிவால் பகுதிகள் சிவந்த பழுப்பு நிறத்திலும், கண் வளையம்,அலகுப்பூ மற்றும் பாதங்கள் சிவந்த ஆரஞ்சு நிறத்திலும் காணப்படும். பெண்களின் மேல்புறம் மங்கிய நிறத்திலும், வெள்ளை அடிப்பகுதியில் அடர்ந்த செதில் போன்ற அடையாளங்களுடனும், கண் வளையம், அலகுப்பூ மற்றும் பாதங்கள் ஆரஞ்சு நிறத்திலும் காணப்படும். தொடைகள் மற்றும் அடிவால் பகுதிகள் சிறிதளவே வெளிர் சிவப்பு நிறத்தில் காணப்படும். இவை கரையான்கள் போன்ற பூச்சிகளை உண்கின்றன. கடலுக்கு மேல் இடம்பெயரும்போது, இவை இடம்பெயரும் தட்டான்களை உண்பதாகக் கருதப்படுகிறது. இவை தமிழகத்தில் இராஜபாளையத்திலும் பார்க்கப்பட்டுள்ளன.
About the author
Related Posts
October 6, 2021
பஞ்ச வண்ணக்கிளி
September 23, 2021
மெரீனோ ஆடு
October 8, 2021