கூகை ஆந்தை

கூகை ஆந்தை (barn owl, Tyto alba) என்பது Tytonidae குடும்பத்தைச் சேர்ந்த ஆந்தை வகை ஆகும்.


உடலமைப்பு


36 செ.மீ. – வட்ட வடிவமான இதன் முகத்தினைச் சுற்றி விறைத்து நிற்கும் பலவகை நிறங்கள் கொண்ட தூவிகள் இருக்கும். சாம்பல் நிற உடலில் கருப்பு காணலாம். மார்பும் வயிறும் ஆழ்ந்த பழுப்புப் புள்ளிகளோடு பட்டு நிறத்தை ஒத்த வெண்மையாக இருக்கம்.


காணப்படும் பகுதிகள், உணவு


தமிழகம் எங்கும், பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், புழக்கத்தில் இல்லாத கிணறு ஆகியவற்றில் பகலில் பதுங்கி இருந்து தாங்கம் ஆற்றல் இதன் கண்களுக்கு இல்லாததால் காக்கை முதலிய பறவைகள் தாக்கும்போது தன்னைக் காத்துக் கொள்ள இயலாதாக உள்ளது. சிட்டுக்குருவி, எலி, சுண்டெலி, ஆகியவற்றை உணவாகக்கொள்ளும் இது உழவர்களுக்கு உற்ற தோழன் என்ற பெருமையைப் பெறுகின்றது. பறக்கும்போது இறக்கைகளிலிருந்து ஒலி எழுவதில்லை. இதனால் எதிர்பாராது இரவில் இதனை எதிர்ப்படுவோர் அஞ்சி இதனை சாக்குருவி என அழைக்கின்றனர். பலவகைக் குரல்களில் உரக்கக் கத்தும். இதன் குரல் கரகரப்பாக வைவதுபோல அமையும்.


இனப்பெருக்கம்


ஆண்டு முழுவதும் மரங்களின் பொந்துகளிலும் பாழடைந்த கட்டிடங்களிலும் 4 முதல் 7 முட்டைகள் இடும். தோற்றத்தில் இதனை ஒத்த புல்கூகை Grass Owl, T.capensis மேற்குத் தொடர்ச்சி மலைசார்ந்த பகுதிகளில் புல் உயரமாக வளர்ந்திருக்கும் காடுகளில் காணப்படுகிறது. தரையில் புல்லிடையே பகலில் பதுங்கியிருந்த இரவில் எலி முதலியவற்றை வேட்டையாடும் மரங்களை நாடிச்செல்லும் பழக்கம் இல்லாதது.

வெளி இணைப்புகள்

கூகை ஆந்தை – விக்கிப்பீடியா

Barn owl – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.