சின்ன வல்லூறு (Besra) என அழைக்கப்படும் ஊன் உண்ணிப் பறவை இனத்தைச் சார்ந்த இப்பறவை குடும்ப அக்சிபிட்ரிடே என்ற குடும்பத்தைச் சார்ந்தவையாகும். இந்தியத்துணைக்கண்டப் பகுதிகளான தென்கிழக்கு ஆசியா கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் வாழுகிறது. உயரமான மரங்களில் ஒவ்வொரு ஆண்டும் புதிய கூடுகட்டி அவற்றில் இரண்டு முதல் ஐந்து முட்டைகள் வரை இட்டு இனப்பெருக்கம் செய்கிறது. வேகமாகப் பறக்கும் திறன்கொண்ட இப்பறவை நீண்ட வால்பகுதியுடன் நடுத்தர உடல்வாகைக் கொண்டு காணப்படுகிறது. இவை பறப்பது வேகமாக இருந்தாலும் வைரி என்ற பறவையிலிருந்து வேறுபடுகிறது.
இப்பறவைகளின் பொதுப்பெயர் பாறு என அழைக்கப்படுகிறது. இவை குளிர்காலத்தில், வனப்பகுதியில் மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கிறது. தன் உணவைப்பிடிக்க மறைந்திருந்து திடீரென தாக்கும் குணம் கொண்டுள்ளது. இவை ரஷ்ய வல்லூறை விட சிறியனவாகவும் பெரிய அண்டிலிசுபகுதியில் காணப்படும் கூரிய ஒளி வல்லூரை விட பெரியதாகவும் உள்ளது. இவை உணவாகப் பல்லிகள், தட்டாரப்பூச்சி, மற்றும் சிறிய பறவைகளையும் பாலூட்டிகளையும் பிடித்து உண்ணுகிறது.