சிறிய கரும்பருந்து (Black-shouldered Kite) இப்பறவை ஆத்திரேலியா பகுதிகளில் திறந்த வெளிகளில் அதிகமாகக்காணப்படுகிறது. இப்பறவை ஊன் உண்ணிப் பறவையாகும். இப்பறவை ஐரோவாசியா, ஆப்பிரிக்கா, மற்றும் அமெரிக்காப் பகுதிகளில் காணப்படும் கருஞ்சிறகுப் பருந்தைப் போல் காணப்படுகிறது.
விளக்கம்
இப்பறவையின் நீளம் சாதாரணமாக 35 முதல் 38 செமீ வரையிலும் சிறகு விரிந்த நிலையில் 80 முதல் 95 செமீட்டர்கள் வரையிலும் உள்ளது. இவற்றில் ஆண பறவை சிறியதாகவும் கண்கள் சிகப்பு நிறத்திலும் காணப்படுகிறது. இப்பறவை தன் சிறகை விரித்துப் பறக்கும் போது விசில் அடிப்பதுபோல் சத்தம் எழுப்பும் தன்மை கொண்டது. இவற்றின் இனப்பெருக்க காலம் ஆகசுட் மாதத்திற்கும் சனவரி மாதத்திற்கும் இடையில் நடக்கிறது. இவை வானத்தில் சுற்றிக்கொண்டே தன் இரையை பூமியில் பார்த்து விரைந்து சென்று பிடிக்கும் வல்லமை கொண்டுள்ளது. முப்பது நாட்களுக்குள் மூன்று முட்டைகள் இட்டு அடைகாக்கிறது. இதன் குஞ்சுகள் ஐந்து வாரங்களில் வெளிவந்து தனது இரை வேட்டைக்கு தயாராகிறது.